பிரபு படத்தில் அஜீத்?

அஜீத் நடித்து சமீபத்தில் ரிலீஸான பில்லா படத்தில் பிரபு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ரஜினியின் பில்லாவில் பாலாஜி நடித்திருந்த டி.எஸ்.பி. கேரக்டரில் பிரபு நடித்திருந்தார்.
இந்த நிலையில் அஜீத்தை வைத்து புதிய படம் தயாரிக்க பிரபு முயன்று வருகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது. பிரபு படத்தில் நடிக்க அஜீத்தும் சம்மதம் தெரிவித்துள்ளாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஆமாம், அஜீத்துடன் பேச்சு நடந்து வருகிறது. இருப்பினும் இதுவரை எதுவும் இறுதி செய்யப்படவில்லை. இன்னும் சில வாரங்கள் ஆகும். முன்னணி இயக்குநர்கள் சிலருடனும் இதுதொடர்பாக பேசி வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.
புதிய படத்தில் நடிக்க அஜீத்துக்கு ரூ. 6 கோடி வரை சம்பளம் தர சிவாஜி பிலிம்ஸ் முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.
கலக்குங்க 'தல'!
Comments


Click it and Unblock the Notifications