அட பிரபுவா இது...அடையாளமே தெரியாமல் இப்படி மாறிட்டாரே... எதுக்குன்னு தெரியுமா ?

சென்னை : மணிரத்னம் இயக்கும் வரலாற்று படமான பொன்னியின் செல்வன் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அதே பெயரிலேயே படமாக எடுத்து வருகிறார் மணிரத்னம்.

ரூ.500 கோடி பொருட்செலவில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கின்றன. கொரோனாவால் தள்ளிப் போன பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி புதுச்சேரி, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது.

யார் யாருக்கு எந்த ரோல்

யார் யாருக்கு எந்த ரோல்

ஆதித்ய கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி, வானதியாக ஷோபிதா, பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், கடம்பூர் சம்புவரையராக நிழல்கள் ரவி, மலையமானாக லால், ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம், அநிருத்த பிரம்மராயராக பிரபு, சோமன் சாம்பவனாக ரியாஸ் கான், ரவிதாசனாக கிஷோர், சேந்தனாக அமுதன் - அஸ்வின், கந்தன் மாறனாக விக்ரம் பிரபு, மதுராந்தகனாக அர்ஜுன் சிதம்பரம், பார்த்திபேந்திர பல்லவனாக ரஹ்மான், குடந்தை ஜோதிடராக மோகன்ராம் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.

பரபரப்பை கிளப்பிய பட்டியல்

பரபரப்பை கிளப்பிய பட்டியல்

சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் யார் யார் எந்த ரோல்களில் நடிக்கிறார்கள் என்ற இந்த பட்டியல் சோஷியல் மீடியாவில் வெளியானது. இது படக்குழுவினர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ பட்டியல் இல்லை என்றாலும் இதற்கு ரசிகர்களிடம் வரவேற்பு பெரிய அளவில் காணப்பட்டது. இந்த பட்டியல் வெளியானது முதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

பிரபுவா இது

பிரபுவா இது

இந்த பட்டியலின் படி அநிருத்த பிரம்மராயராக பிரபு நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது பிரபுவுடன் நடிகர் ரகுமான் எடுத்துக் கொண்ட செல்ஃபி ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு பிரபு, உடல் எடை குறைந்து காணப்படுகிறார். பொன்னியின் செல்வன் படத்தின் கேரக்டருக்காக தான் பிரபு இப்படி மாறி உள்ளார் என கூறப்படுகிறது.

ஆச்சரியப்படும் நெட்டிசன்கள்

ஆச்சரியப்படும் நெட்டிசன்கள்

பிரபுவின் நம்ப முடியாத இந்த உடல் எடை மாற்றத்தை கண்டு நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். பொன்னியின் செல்வனில் உண்மையில் என்ன ரோலில் தான் நடிக்கிறீர்கள். எப்படி இப்படி உடல் எடை குறைத்தீர்கள் என பலரும் டிப்ஸ் கேட்டு வருகின்றனர்.

4 மொழிகளில் தயாராகும் படம்

4 மொழிகளில் தயாராகும் படம்

பான் இந்தியன் படமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ரகுமான், லால் உள்ளிட்ட ஏராளமான நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகிறது.

2022 ல் தான் ரிலீஸ்

2022 ல் தான் ரிலீஸ்

இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் முதல் பகுதி 2022 ம் ஆண்டின் துவக்கத்தில் வெளியிடப்பட உள்ளது. அடுத்த பாகத்தையும் அடுத்த சில மாதங்களில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

Recommended Video

STR என்ன பாலா பட HEROவா மாறிட்டாரு! அடையாளமே தெரியலயே Simbu | Oneindia Tamil
அடுத்தடுத்து கசியும் தகவல்கள்

அடுத்தடுத்து கசியும் தகவல்கள்

சமீபத்தில் இந்த படத்தின் பிரம்மாண்ட ஃபஸ்ட்லுக் வெளியிடப்பட்டு, பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து படத்தின் பாடல்கள் குறித்த விபரங்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து படத்தின் பிரம்மாண்ட செட் உள்ளிட்ட ஃபோட்டோக்கள் கசிந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

வேற லெவல் எதிர்பார்ப்பு

வேற லெவல் எதிர்பார்ப்பு

இதற்கிடையே இணையத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நடிகர்கள் எந்த ரோலில் நடிக்கிறார்கள் என்ற பட்டியலை படத்தின் மீதான எதிர்பார்ப்பை வேற லெவலில் எகிற வைத்துள்ளது. இதனால் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X