»   »  பிரபுவுடன் ஜோடி சேரும் நவ்யா திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் ஒரு படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதவுள்ளார். கடந்த முறை அவர் வசனம்இடம்பெற்ற மண்ணின் மைந்தன் படத்தை இயக்கிய ராம. நாராயணன், இந்தப் புதிய படத்தை தயாரிக்கவுள்ளார்.கருணாநிதியின் உறவினரான அமிர்தம் படத்தை இயக்குகிறார்.கருணாநதியின் பன்முகங்களில் திரைக்கதை ஆசிரியர் என்பதுவும் ஒன்று. எண்ணற்ற படங்கள் கருணாநிதியின் மின்னல்வசனங்களால் புகழ் பெற்றுள்ளன. முதல்வர் பதவிக்கு வருவதற்கு முன்பு அவர் படு பிசியாக திரைப்படங்களுக்கு வசனம்எழுதி வந்தார். அதன் பின்னர் படங்களைக் குறைத்துக் கொண்டார். பொதுவாக எதிர்க்கட்சியாக இருக்கும் போது மட்டுமே அவர் அதிகஅளவில் படங்களுக்கு வசனம் எழுதுவது வழக்கம். சமீபத்தில் கண்ணம்மா, மண்ணின் மைந்தன் ஆகிய இரு படங்களுக்கு கதை, வசனம் எழுதினார். தற்போது மீண்டும் ஒருபடத்திற்கு வசனம் எழுதப் போகிறார். இந்தப் படத்திற்கு பாசக் கிளிகள் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.இயக்குனர் ராம. நாராயணன் இப்படத்தைத் தயாரிக்கிறார். அமிர்தம் இயக்குகிறார். பிரபு, முரளி இருவரும் முதல்முறையாக இப்படத்தின் மூலம் இணைகின்றனர். இருவரும் இதற்கு முன்பு கருணாநிதியின் கதை வசனத்தில் தனித்தனியாகநடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.பிரபு பாலைவன ரோஜாக்கள் படத்திலும், பூ ஒன்று புயலானது படத்தில் முரளியும் கருணாநிதி வசனத்தைப் பேசிநடித்தவர்கள். இவர்கள் தவிர ரோஜா, மாளவிகா, நவ்யா நாயர் ஆகிய நடிகைகளும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்கள். காமடிக்கு வடிவேலு, நாசர், மனோரமா, வினீத் ஆகியோரும் படத்தில் உள்ளனர். பாடல்களை வாலி, வைரமுத்து, பா.விஜய்ஆகியோர் எழுதுகிறார்கள். கருணாநிதியும் பாட்டு எழுதவுள்ளார். வித்யாசாகர் இசையமைக்கிறார். மைசூர், பொள்ளாச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.இந்தப் படத்தில் நடிப்பதற்காக முன்னணி நடிகை ஒருவரை முதலில் ராம. நாராயணன் அணுகியுள்ளார். ஆனால் அவர்மறுத்து விட்டாராம். இதையடுத்து வேறு சில முன்னணி நடிகைகளையும் அவர் சென்று கால்ஷீட் கேட்டுள்ளார். ஆனால் எல்லோரும் தயங்கி விலகி விட்டார்கள். இதனால் கடுப்பாகிப் போன ராம நாராயணன் யாரைப் போடுவது என்றுயோசித்துக் கொண்டிருக்கும்போது தான் நவ்யா நாயர் அவரது நினைவுக்கு வந்துள்ளார்.சரி, அவரை அணுகி கேட்போம் என்று நினைத்து சந்தித்தபோது, உடனடியாக ஒத்துக் கொண்டாராம். கதை நன்றாகஇருப்பதால் மட்டுமல்லாமல் கருணாநிதியின் வசனத்தில் நடிக்கும் வாய்ப்பு அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது என்பதாலும் தான்இந்த வாய்ப்பை நவ்யா ஒத்துக் கொண்டாராம்.நவ்யாவால் கருணாநிதியின் வசனத்தில் நடிக்க முடியும், பேச முடியுமான்னு தெரியலியே!

பிரபுவுடன் ஜோடி சேரும் நவ்யா திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் ஒரு படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதவுள்ளார். கடந்த முறை அவர் வசனம்இடம்பெற்ற மண்ணின் மைந்தன் படத்தை இயக்கிய ராம. நாராயணன், இந்தப் புதிய படத்தை தயாரிக்கவுள்ளார்.கருணாநிதியின் உறவினரான அமிர்தம் படத்தை இயக்குகிறார்.கருணாநதியின் பன்முகங்களில் திரைக்கதை ஆசிரியர் என்பதுவும் ஒன்று. எண்ணற்ற படங்கள் கருணாநிதியின் மின்னல்வசனங்களால் புகழ் பெற்றுள்ளன. முதல்வர் பதவிக்கு வருவதற்கு முன்பு அவர் படு பிசியாக திரைப்படங்களுக்கு வசனம்எழுதி வந்தார். அதன் பின்னர் படங்களைக் குறைத்துக் கொண்டார். பொதுவாக எதிர்க்கட்சியாக இருக்கும் போது மட்டுமே அவர் அதிகஅளவில் படங்களுக்கு வசனம் எழுதுவது வழக்கம். சமீபத்தில் கண்ணம்மா, மண்ணின் மைந்தன் ஆகிய இரு படங்களுக்கு கதை, வசனம் எழுதினார். தற்போது மீண்டும் ஒருபடத்திற்கு வசனம் எழுதப் போகிறார். இந்தப் படத்திற்கு பாசக் கிளிகள் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.இயக்குனர் ராம. நாராயணன் இப்படத்தைத் தயாரிக்கிறார். அமிர்தம் இயக்குகிறார். பிரபு, முரளி இருவரும் முதல்முறையாக இப்படத்தின் மூலம் இணைகின்றனர். இருவரும் இதற்கு முன்பு கருணாநிதியின் கதை வசனத்தில் தனித்தனியாகநடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.பிரபு பாலைவன ரோஜாக்கள் படத்திலும், பூ ஒன்று புயலானது படத்தில் முரளியும் கருணாநிதி வசனத்தைப் பேசிநடித்தவர்கள். இவர்கள் தவிர ரோஜா, மாளவிகா, நவ்யா நாயர் ஆகிய நடிகைகளும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்கள். காமடிக்கு வடிவேலு, நாசர், மனோரமா, வினீத் ஆகியோரும் படத்தில் உள்ளனர். பாடல்களை வாலி, வைரமுத்து, பா.விஜய்ஆகியோர் எழுதுகிறார்கள். கருணாநிதியும் பாட்டு எழுதவுள்ளார். வித்யாசாகர் இசையமைக்கிறார். மைசூர், பொள்ளாச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.இந்தப் படத்தில் நடிப்பதற்காக முன்னணி நடிகை ஒருவரை முதலில் ராம. நாராயணன் அணுகியுள்ளார். ஆனால் அவர்மறுத்து விட்டாராம். இதையடுத்து வேறு சில முன்னணி நடிகைகளையும் அவர் சென்று கால்ஷீட் கேட்டுள்ளார். ஆனால் எல்லோரும் தயங்கி விலகி விட்டார்கள். இதனால் கடுப்பாகிப் போன ராம நாராயணன் யாரைப் போடுவது என்றுயோசித்துக் கொண்டிருக்கும்போது தான் நவ்யா நாயர் அவரது நினைவுக்கு வந்துள்ளார்.சரி, அவரை அணுகி கேட்போம் என்று நினைத்து சந்தித்தபோது, உடனடியாக ஒத்துக் கொண்டாராம். கதை நன்றாகஇருப்பதால் மட்டுமல்லாமல் கருணாநிதியின் வசனத்தில் நடிக்கும் வாய்ப்பு அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது என்பதாலும் தான்இந்த வாய்ப்பை நவ்யா ஒத்துக் கொண்டாராம்.நவ்யாவால் கருணாநிதியின் வசனத்தில் நடிக்க முடியும், பேச முடியுமான்னு தெரியலியே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் ஒரு படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதவுள்ளார். கடந்த முறை அவர் வசனம்இடம்பெற்ற மண்ணின் மைந்தன் படத்தை இயக்கிய ராம. நாராயணன், இந்தப் புதிய படத்தை தயாரிக்கவுள்ளார்.கருணாநிதியின் உறவினரான அமிர்தம் படத்தை இயக்குகிறார்.

கருணாநதியின் பன்முகங்களில் திரைக்கதை ஆசிரியர் என்பதுவும் ஒன்று. எண்ணற்ற படங்கள் கருணாநிதியின் மின்னல்வசனங்களால் புகழ் பெற்றுள்ளன. முதல்வர் பதவிக்கு வருவதற்கு முன்பு அவர் படு பிசியாக திரைப்படங்களுக்கு வசனம்எழுதி வந்தார்.

அதன் பின்னர் படங்களைக் குறைத்துக் கொண்டார். பொதுவாக எதிர்க்கட்சியாக இருக்கும் போது மட்டுமே அவர் அதிகஅளவில் படங்களுக்கு வசனம் எழுதுவது வழக்கம்.


சமீபத்தில் கண்ணம்மா, மண்ணின் மைந்தன் ஆகிய இரு படங்களுக்கு கதை, வசனம் எழுதினார். தற்போது மீண்டும் ஒருபடத்திற்கு வசனம் எழுதப் போகிறார். இந்தப் படத்திற்கு பாசக் கிளிகள் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ராம. நாராயணன் இப்படத்தைத் தயாரிக்கிறார். அமிர்தம் இயக்குகிறார். பிரபு, முரளி இருவரும் முதல்முறையாக இப்படத்தின் மூலம் இணைகின்றனர். இருவரும் இதற்கு முன்பு கருணாநிதியின் கதை வசனத்தில் தனித்தனியாகநடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபு பாலைவன ரோஜாக்கள் படத்திலும், பூ ஒன்று புயலானது படத்தில் முரளியும் கருணாநிதி வசனத்தைப் பேசிநடித்தவர்கள். இவர்கள் தவிர ரோஜா, மாளவிகா, நவ்யா நாயர் ஆகிய நடிகைகளும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்கள்.


காமடிக்கு வடிவேலு, நாசர், மனோரமா, வினீத் ஆகியோரும் படத்தில் உள்ளனர். பாடல்களை வாலி, வைரமுத்து, பா.விஜய்ஆகியோர் எழுதுகிறார்கள். கருணாநிதியும் பாட்டு எழுதவுள்ளார். வித்யாசாகர் இசையமைக்கிறார்.

மைசூர், பொள்ளாச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக முன்னணி நடிகை ஒருவரை முதலில் ராம. நாராயணன் அணுகியுள்ளார். ஆனால் அவர்மறுத்து விட்டாராம். இதையடுத்து வேறு சில முன்னணி நடிகைகளையும் அவர் சென்று கால்ஷீட் கேட்டுள்ளார்.


ஆனால் எல்லோரும் தயங்கி விலகி விட்டார்கள். இதனால் கடுப்பாகிப் போன ராம நாராயணன் யாரைப் போடுவது என்றுயோசித்துக் கொண்டிருக்கும்போது தான் நவ்யா நாயர் அவரது நினைவுக்கு வந்துள்ளார்.

சரி, அவரை அணுகி கேட்போம் என்று நினைத்து சந்தித்தபோது, உடனடியாக ஒத்துக் கொண்டாராம். கதை நன்றாகஇருப்பதால் மட்டுமல்லாமல் கருணாநிதியின் வசனத்தில் நடிக்கும் வாய்ப்பு அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது என்பதாலும் தான்இந்த வாய்ப்பை நவ்யா ஒத்துக் கொண்டாராம்.

நவ்யாவால் கருணாநிதியின் வசனத்தில் நடிக்க முடியும், பேச முடியுமான்னு தெரியலியே!


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil