»   »  விலகும் விஜயகாந்த்: தலைவராகும் பிரபு!

விலகும் விஜயகாந்த்: தலைவராகும் பிரபு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளதால் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர்தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதில்லை என்று நடிகர் விஜயகாந்த் முடிவுசெய்துள்ளார். புதிய தலைவர் பதவிக்கு நடிகர் பிரபுவின் பெயர் அடிபடுகிறது.

நடிகர் சங்கத்தின் தற்போதைய தலைவராக விஜயகாந்த் 2வது முறையாக பதவிவகித்து வருகிறார். புதிய கட்சி தொடங்கிய பின்னர் அவர் தலைவர் பதவியிலிருந்துவிலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நான் தலைவர் பதவியிலிருந்து விலகமாட்டேன் என்று விஜயகாந்த் அறிவித்துவிட்டார்.

இந் நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெறவுள்ளது.சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆகியுள்ள விஜயகாந்த், கட்சிக்குகிடைத்துள்ள வரவேற்பினால் சந்தோஷமடைந்துள்ளார்.


தொடர்ந்து தீவிர அரசியல் பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளார். அதே நேரத்தில்நடிக்கவும் போகிறாராம்.

ஆனால், நடிகர் சங்கத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்குவந்துள்ளார். புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதியை முடிவுசெய்ய ஜூன் 11ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் கூடுகிறது.

அதில் தேதி முடிவு செய்யப்பட்டு ஆகஸ்ட் மாதத்தில் தேர்தல் நடைபெறும்.

இந்தத் தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர்உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.


தலைவர் பதவிக்கு மூத்த நடிகர்களில் ஒருவரான பிரபுவின் பெயர் அடிபடுகிறது.அவர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

சிவாஜியின் குடும்பத்தில் சசிகலா குடும்பம் பெண் எடுத்திருந்தாலும் பிரபுஉள்ளிட்டவர்கள் அதிமுகவிடமிருந்து விலகியே உள்ளது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் முதல்வரான கருணாநிதியை பிரபு நேரில் சந்தித்து வாழ்த்திவிட்டு வந்தார்.

அரசியல் சாயம் பூசப்படாத ஒருவரை இம்முறை தலைவராக தேர்ந்தெடுக்கவேண்டும் என்று நடிகர், நடிகையர் மத்தியில் பெரும் விருப்பம் நிலவுகிறது.

இதனால் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட பிரபு தலைவர் ஆக வாய்ப்புகள் அதிகம்உள்ளன.


இதற்கிடையே விஜய்காந்த் அளித்துள்ள பேட்டியில், நான் சட்டசபைக்குள் செல்லும்முன் முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துவிட்டு ஆசி பெறுவேன்என்று கூறியுள்ளார்.

அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்காமல் தனது தொகுதியின் வளர்ச்சிக்குப்பாடுபட விஜய்காந்த் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil