ஹீரோ .. ஹீரோ ..
குடிசையில் வாழும் ஹீரோ, தெருவில் கூத்தடிக்கும் ரோமியோ என்று பல வேடங்களில் நடித்தவர் பிரபு தேவா.ஆனால் களவும் கற்று மற படத்தில் சினிமா தியேட்டரில் பிளாக்கில் டிக்கெட் விற்கும் வாலிபராக நடிக்கிறார்.
படத்தைப் பற்றி டைரக்டர் மனோஜ்ஜி இப்படிக் கூறுகிறார்.
வாழ்க்கையில் பல குற்றங்களை செய்து வரும் ஒரு இளைஞனைப் பற்றிய கதை. ஒவ்வொரு குற்றத்தையும்அழகாகத் திட்டமிட்டு மாஸ்டர் மைன்டாக செய்வான்.
ஆனால் ஒரு முறைகூட போலீசில் மாட்டிக் கொள்ள மாட்டான். அவ்வளவுதூரம் தத்ரூபமாகத் திட்டமிட்டு பலகுற்றங்களை செய்து வருவான்.
இப்படியே போய்க் கொண்டிருக்கும் அவனது வாழ்வில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள்.
யெஸ்!
ஒரு நாள் அவன் காயத்ரி (ரோஜா) என்ற பெண்ணை சந்திக்கிறான்.
அப்போது அவனது வாழ்க்கையின் பாதையே மாறி விடுகிறது. சிறந்த மனிதநேயமுள்ள மனிதனாக மாறிவிடுகிறான். அப்போது கொஞ்சம் கொஞ்சமாக காயத்ரியை விரும்ப ஆரம்பித்து விடுவான். இருவரும் காதலிக்கத்தொடங்கியவுடன் விதி அவன் வாழ்க்கையில் குறுக்கிடும்.
அவன் செய்யாத குற்றத்துக்கு தண்டனை பெறுவான். அதனால் தனது ஆசைக்காதலி காயத்திரியை அவனால் கரம்பிடிக்க முடியாமல் போய் விடும். க்ளைமாக்ஸ் என்ன ஆகும் என்பதுதான் கதை.
இந்தப் படத்துக்கு இசை தேவா. புதுமை படைத்திருக்கிறார் என்று கூட சொல்லலாம். பிரபு தேவாவை, மைக்கேல்ஜாக்சனைப் போல் ஆட வைத்து ஒரு பாட்டு எடுத்திருக்கிறோம். அது கண்டிப்பா ஹிட்டாகும்.
பிரபுதேவாவின் அண்ணன் ராஜூ சுந்தரம் மற்றும் ஃபைட் மாஸ்டர் கனல் கண்ணன் ஆகியோர் இணைந்து ஆடும்டான்ஸ் மிகவும் பரபரப்பாகப் பேசப்படும் என்றார்.


Click it and Unblock the Notifications











