ஹீரோ .. ஹீரோ ..
அலாவுதீன் படத்தை ரொம்பவே நம்பியிருக்கிறார் மார்க்கெட் இழந்து விட்ட பிரபு தேவா.
பிரபு தேவாவின் மார்க்கெட் போய் விட்டது என்று கோடம்பாக்கத்தில் ரொம்பவே பேசிக் கொள்கிறார்கள்.இதனால் இந்திக்கு நடன மாஸ்டராக போனார். அங்கும் "மதராசி " என்று கூறி அவ்வளவாக வாய்ப்புகள்வரவில்லை.
இதனால் சென்னைக்கும், சொத்துக்கள் வாங்கிப் போட்டுள்ள மைசூருக்குமாக அலைந்து கொண்டிருந்த அவரைபார்த்திபன் கூப்பிட்டு மிஸ்டர் ஒயிட் விளம்பரத்தில் நடிக்க வைத்தார்.
விளம்பரமும் ஹிட் ஆகவில்லை, பிரபு தேவாவும் பேசப்படவில்லை. இந் நிலையில் இப்போது ரிலீசுக்குத் தயாராகஇருக்கும் அலாவுதீன் படத்தை மட்டுமே பிரபு தேவா முழுமையாக நம்பியுள்ளார். ஆனால், படத்தை வாங்கஆளில்லாமல் பெட்டியில் தூங்குகிறது.
இந்தப் படம் வெளிவந்தால் மறுபடியும் மார்க்கெட்டை பிடித்து விடலாம் என்று அசாத்தியமாக நம்புகிறார்.
ஏதாவது, அலாவூதினின் அற்புத விளக்கு தான் படம் ரிலீஸ் செய்ய உதவ வேண்டும் என்ற நிலை.
பிரபு தேவாவின் மார்க்கெட் மந்தமாக இருப்பதால் காயத்ரி ஜெயராம் ரொம்பவே சந்தோஷமாக இருப்பதாகவும்கோலிவுட்டில் குசுகுசுக்கிறார்கள். தனக்கு வேண்டியவர்களிடம் இதைச் சொல்லி சொல்லி மகிழ்கிறாராம் காயத்ரி.
காரணத்தை உங்களுக்கு விலாவாரியாக சொல்லனுமா என்ன?.காயத்ரியின் முதல் படமான மனதில் திருடி விட்டாயில் தேவா அவரை படுத்திய பாடு தான் காரணமாம்.


Click it and Unblock the Notifications











