உன் பேர் என்னம்மா குஷ்பூவா?.. உருகிப்போன பிரபு.. பழசெல்லாம் நியாபகம் வந்துடுச்சு போல
சென்னை: தமிழ் சினிமாவில் இளைய திலகம் என ரசிகர்களால் ரசிக்கப்படுபவர் பிரபு. பல படங்களில் ஹீரோவாக நடித்த அவர்; இப்போது கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக ஜொலித்துவருகிறார். அவரது மகன் விக்ரம் பிரபுவும் கோலிவுட்டில் குறிப்பிடத்தக்க ஹீரோக்களில் ஒருவராக வலம் வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபுவின் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.
இந்திய சினிமாவின் நடிப்பு பல்கலைக்கழகம் என போற்றப்படும் சிவாஜி கணேசனின் இளைய மகன் பிரபு ஆவார். 1982ல் லாட்டரி டிக்கெட் படம் மூலம் பிரபு சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் கதாநாயகனாக நடித்து நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். பி.வாசு இயக்கத்தில் அவரும், குஷ்பூவும் நடித்த சின்னத்தம்பி படம் மெகா ஹிட்டானது. அந்தப் படத்தில் பிரபுவின் மழலைத்தனமான நடிப்பு இன்றுவரை பலரது ஃபேவரைட்டாக இருக்கிறது.

நல்ல பெயர்: சின்னதம்பி திரைப்படம்தான் பிரபுவுக்கு மைல் கல் என்றே சொல்லலாம். தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே பாடலில் பிரபுவின் முக பாவனைகளை இப்போது பார்த்தாலும் கண் கொட்டாமல் ரசித்துக்கொண்டே இருக்கலாம். அந்த அளவுக்கு அதில் பின்னியெடுத்திருப்பார். ஓவர் ஆக்டிங் எதுவும் இல்லாமல் அசத்தியவர். அக்னி நட்சத்திரம் படத்தில் எல்லாம் அவரது கேரக்டர் அவ்வளவு மாஸாக எழுதப்பட்டிருந்தது. அதனை அவரும் சரியாக பயன்படுத்தி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்: சினிமாவில் கதாநாயகனாக மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியவர் பிரபு. ரஜினியுடன் 80களில் நடித்ததற்கு பிறகு மெகா ஹிட்டான சந்திரமுகி படத்தில் நடித்திருந்தார். அதிலும் அவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. அதேபோல் கமல் ஹாசனுடன் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் நடித்து அதகளம் செய்திருப்பார். அதேபோல் விஜய் ஹீரோவாக நடித்த வாரிசு படத்தில் சரத்குமாருக்கு நண்பராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக அவர் அனைத்து ஏரியாக்களிலும் சிறந்த நடிகர்தான்.
குஷ்பூவுடன் காதல்: இதற்கிடையே அவர் பீக்கில் இருந்தபோது நடிகை குஷ்பூவுடன் காதலில் விழுந்தார். ஆனால் அந்தக் காதலுக்கு சிவாஜி கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அவரை பிரபு திருமணம் செய்துகொள்ளவில்ல என்ற பேச்சும்; குஷ்பூவை காதலிக்கும்போதே பிரபுவுக்கு திருமணமாகிவிட்டது; அவரது மனைவி இந்த விஷயத்தில் எப்படியோ பிரபுவை வெளியே கொண்டு வந்துவிட்டார் என்ற பேச்சும் இன்றளவும் ஓடுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
என்ன வீடியோ?: அதாவது நேற்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25வது நினைவு தினம். அதனையொட்டி சென்னையில் இருக்கும் அவரது நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார் பிரபு. அதனையடுத்து அங்கே வந்த பெண் பத்திரிகையாளரிடம் பேசிவிட்டு; 'பாப்பா உன் பெயர் என்ன ம்மா' என கேட்க; அந்தப் பத்திரிகையாளரோ, 'சுஷ்மா' என சொல்ல; 'குஷ்பூவா?' என கேட்டு சிரித்துவிட்டார்.
அதை பார்த்து அருகே இருந்தவர்களும் சிரித்துவிட்டார்கள். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்களோ, 'பிரபுவுக்கு குஷ்பூ என்று காதில் விழுந்தவுடனேயே அவரது நினைவுகள் எல்லாம் 80கள், 90களுக்கு சென்றுவிட்டு வந்திருக்கும். அதனால்தான் அந்த ஏக்கம் கலந்த சிரிப்பை உதிர்த்திருக்கிறார்' என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
