பிரபுதேவா சைக்கோவாக நடிக்கும் பஹீரா டிரைலர் தேதி வெளியானது!

சென்னை : நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பல முகங்களை கொண்டுள்ளவர் நடிகர் பிரபுதேவா.

தமிழில் சில படங்களை இயக்கியிருந்தாலும் ஹிந்தியில் தொடர்ந்து படங்களை இயக்கி வெற்றி பெற்று வருகிறார்.

இந்த நிலையில் முதல் முறையாக சைக்கோவாக பிரபுதேவா நடித்திருக்கும் பஹீரா டிரைலர் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

நடிப்பில் கவனம்

நடிப்பில் கவனம்

நடன இயக்குனராக பலருக்கும் அறிமுகமான பிரபுதேவா இப்பொழுது நடிகர் மற்றும் இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்து வருகிறார். குறிப்பாக நடிகராக இவர் நடித்த அடுத்தடுத்த திரைப்படங்கள் தமிழில் தொடர்ந்து வெற்றி பெற்று வர நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் சில படங்களை இயக்கியிருந்தாலும் ஹிந்தியில் இவர் இயக்கி திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று வருவதால் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை தொடர்ந்து இயக்கி வருகிறார். அந்த வகையில் சல்மான் கான் நடிப்பில் கடைசியாக வெளியான ராதே படத்தை பிரபுதேவா இயக்கி இருந்தார்.

3 கண்களுடன்

3 கண்களுடன்

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் பஹீரா. அனேகன் பட கதாநாயகி அமைரா தஸ்தூர் இதில் ஜோடியாக நடித்துள்ளார். பிரபுதேவா 3 கண்களுடன் வித்தியாசமான சைக்கோ கதாபாத்திரத்தில் இப்படத்தில் மிரட்டியுள்ளார்.

சைக்கோ கதாபாத்திரத்தில்

சைக்கோ கதாபாத்திரத்தில்

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வந்த இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது அதில் ஜனனி, ரம்யா நம்பீசன்,சஞ்சிதா ஷெட்டி,காயத்ரி, சோனியா அகர்வால், சாக்ஷி அகர்வால் என பலர் டீசரில் தோன்றியது பலருக்கும் ஆச்சரியம் அளித்தது. த்ரில்லருக்கு பஞ்சமில்லாமல் உருவாகியுள்ள இந்த படத்தை பரதன் பிலிம்ஸ் தயாரித்து இருக்க கணேசன் சேகர் இசையமைத்து உள்ளார்.

அக்டோபர் 8ஆம் தேதி டிரைலர்

அக்டோபர் 8ஆம் தேதி டிரைலர்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மிக விரைவில் ரிலீசாக உள்ள இப்படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி அக்டோபர் 8ஆம் தேதி பஹீரா டிரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சைக்கோவாக பிரபுதேவா, 7 கதாநாயகிகள் என மிகவும் வித்தியாசமான படமாக உருவாகியுள்ள பஹீரா டிரைலரைக் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X