பிரபுதேவாவின் தேள் ரிலீஸ் தேதி வெளியானது!
சென்னை: நடிகர் பிரபுதேவாவின் நடிப்பில் உருவாகி வரும் அடுத்தடுத்த திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி ஹிட்டடித்து வருகிறது
Recommended Video
அந்த வகையில் பிரபல நடிகரும் இயக்குனருமான ஹரிகுமார் இயக்கத்தில் பிரபுதேவா ரவுடியாக நடித்துள்ள திரைப்படம் தேள்
பக்கா ஆக்ஷன் கதை களத்தில் உருவாகியுள்ள தேள் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற சூழலில் இப்போது ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

சல்மான் கான் கூட்டணியில்
இந்திய அளவில் அனைவராலும் கொண்டாடப்படும் மிகச் சிறந்த நடன இயக்குனராக உள்ள பிரபுதேவா பல படங்களை இயக்கி இயக்குனராகவும், பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் ஆணித்தரமாக காலை ஊன்றி இருக்கும் பிரபுதேவாவின் இயக்கத்தில் சல்மான் கான் கூட்டணியில் தொடர்ந்து படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் கடைசியாக வெளியான ராதே திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது

முதல் முறையாக போலீஸ் வேடத்தில்
பிரபுதேவா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் எதுவும் சரிவர ஓடாததால் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழில் இவருக்கு கடைசியாக வெளியான பொன்மாணிக்கவேல் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. பிரபுதேவா மற்றும் நிவேதா பெத்துராஜ் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தனர். மிக முக்கியமாக பிரபுதேவா முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்து மிரட்டி இருந்தார்.

காதலித்து கொள்ளும் சைக்கோ
இவ்வாறு படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி அனைவரையும் பிரமிக்க வைத்து வரும் பிரபுதேவா அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பஹீரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். காட்சிக்கு காட்சி விறுவிறுப்பை ஏற்படுத்தக்கூடிய த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள பஹீராவில் பிரபுதேவா அழகிய பெண்களை காதலித்து கொள்ளும் சைக்கோ வில்லனாக நடித்துள்ளார்.

தேள் ரிலீஸ் தேதி
இந்த நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான ஹரிகுமார் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படத்திற்கு தேள் என வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தேள் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த படத்தில் பிரபுதேவா ரவுடியாக நடித்து பட்டையை கிளப்பியுள்ளார் . ஆக்சன் காட்சிகளில் தூள் கிளப்பி இருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் தேள் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய அப்டேட் தற்பொழுது வெளியாகி உள்ளது.அதாவது வரும் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











