மீண்டும் நடிக்க வரும் பிரபுதேவா!

By Staff

இயக்கத்தில் வெற்றியை ருசித்து விட்ட பிரபு தேவா மறுபடியும் நடிப்புக்குத் திரும்ப ஆவலாக உள்ளாராம்.

தெலுங்கில் இரண்டு ஹிட் படங்களையும், தமிழில் போக்கிரியையும் கொடுத்து விட்ட பிரபு தேவா அடுத்த சிரஞ்சீவியை வைத்து அடுத்து ஒரு படத்தை தெலுங்கில் இயக்குகிறார். இதையடுத்து சல்மான் கானை வைத்து இந்தியில் போக்கிரியை ரீமேக் செய்யவுள்ளார்.

தெலுங்கில் அவர் முதலில் டைரக்ட் செய்த நுவ்வொஸ்தாண்டே .. சூப்பர் ஹிட் ஆனது. ஆனால் அடுத்து இயக்கிய பெளர்ணமி பெரிய அளவில் ஓடவில்லை.

இதையடுத்து டக்கென்று தமிழுக்குத் தாவிய பிரபுதேவா, விஜய்யை வைத்து போக்கிரியை எடுத்தார். படம் மெகா ஹிட். இதையடுத்து மீண்டும் பிரபு தேவாவின் இயக்குநர் திறமை வெற்றி கண்டது.

இதையடுத்து மறுபடியும் தெலுங்குக்குத் திரும்பியுள்ளார் பிரபுதேவா. சிரஞ்சீவியை வைத்து சங்கர் தாதாஜிந்தாபாத் படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து இந்தி போக்கிரிக்குப் போகிறார்.

அதில் சல்மான்கான்தான் நாயகன். அவருக்கு ஜோடி போடுபவராக முதலில் ஆசின் இருந்தார். ஆனால் இப்போது ஆயிஷா டாக்கியாவைப் போட்டு விட்டனர்.

இந்த நிலையில், கலைப்புலி தாணு தனது அடுத்த படத்தை இயக்க வருமாறு பிரபுதேவாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் அவரே ஹீரோவாகவும் நடிப்பார் என்று கூறப்படுகிறது. காரணம், பிரபுதேவாவுக்கு மீண்டும் நடிக்கும் ஆசை வந்துள்ளதாம்.

நப்பாசை அல்ல, நல்ல ஆசைதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X