பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி.. எப்போது ரிலீஸ் தெரியுமா?.. வந்தது அறிவிப்பு
சென்னை: பிரதீப் ரங்கநாதன் இப்போது வளர்ந்துவரும் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். அவரது தோற்றம், நடிப்பு, டயலாக் டெலிவிரி அனைத்துமே ரொம்பவே சிம்ப்பிளாக இருப்பதால் ரசிகர்களிடம் எளிதாக கனெக்ட் ஆகிவிட்டார். இப்போது அவர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் எல்ஐகே படத்தில் கமிட்டாகி நடித்துவருகிறார். மேலும் ட்யூட் படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இந்நிலையில் எல்ஐகே பட ரிலீஸ் தேதி குறித்து தெரியவந்திருக்கிறது.
கோமாளி படத்தின் டீசண்ட்டான வரவேற்புக்கு பிறகு சில வருடங்கள் அமைதியாக இருந்த பிரதீப் ரங்கநாதன் தான் இயக்கிய குறும்படத்தை டெவலப் செய்து லவ் டுடே படத்தை இயக்கினார். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இவானா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இயக்குநர் பிரதீப் ரங்கநாதனே இதில் கதாநாயகனாகவும் நடித்தார். இந்தப் படம் அவர் கதாநாயகனாக அறிமுகமாகிய முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்சேஷனல் லவ் டுடே: லவ் டுடே திரைப்படம் இளைஞர்களை குறிப்பாக 2K கிட்ஸை வெகுவாக கவர்ந்துவிட்டதாலும், காதலர்களுக்குள் நடக்கும் ஊடலையும், கூடலையும் தற்காலத்திற்கேற்ப காட்சிப்படுத்தியிருந்ததாலும் மெகா ஹிட்டானது. ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று திரைப்படத்தை ரசித்தனர். மேலும் படம் திரையரங்குகளீல் 100 நாள்கள் ஓடி சாதனை படைத்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டு: இதற்கிடையே லவ் டுடே படத்தை பார்த்த ரஜினி பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டி சால்வை அணிவித்தார். அதுமட்டுமின்றி பிரதீப் ரங்கநாதனிடம் தனக்கு ஒரு கதை செய்ய ரஜினி சொன்னதாகவும் தகவல் பரவியது. இந்தப் படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன் ரொம்பவே பிரபலமாகிவிட்டார்.கடைசியாக அவர் நடித்த டிராகன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. 100 கோடி ரூபாய்வரைக்கும் வசூல் செய்தது.

நடிகர் பிரதீப் ரங்கநாதன்: லவ் டுடே படத்துக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் டிராகன் படத்தில் நடித்தார். அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி நூறு கோடி ரூபாய் வசூலித்தது. தொடர்ந்து இரண்டு படங்களில் 100 கோடி ரூபாய் வசூலித்த ஹீரோ என்ற பெயரையும் பெற்றிருக்கிறார் பிரதீப். அவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தில் நடித்துவருகிறார். கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க; எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் முக்கிய ரோலில் கமிட்டாகியிருக்கின்றனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன.
படம் எப்போது ரிலீஸ்: விக்னேஷ் சிவன் அஜித் படத்திலிருந்து வெளியேறினார். அது அவரது பெயருக்கும் கொஞ்சம் களங்கம் ஏற்பட்டது மாதிரிதான். எனவே அடுத்த படத்தை ஹிட்டாக கொடுக்கும் முனைப்பில் இருக்கிறார் அவர். எனவே இப்படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார். படமானது செப்டம்பர் 18ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அறிவித்திருக்கிறது.
ட்யூட்: இதற்கிடையே பிரதீப் ரங்கநாதனும் மமிதா பைஜுவும் சேர்ந்து ட்யூட் என்ற படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படமானது இந்த வருட தீபாவளியை முன்னிட்டு அக்டோபரில் வெளியாகிறது. இப்போது LIKவும் செப்டம்பரில் ரிலீஸாவதால் தொடர்ந்து இரண்டு பிரதீப் படங்கள் ரிலீஸாகின்றன. இதனால் பிரதீப்பின் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











