ஏப்ரல் ஆரம்பமே பிரதீப் ரங்கநாதன் படம்.. சம்மர் பிளாக்பஸ்டரா மாறுமா LIK?.. விக்னேஷ் சிவன் அமைதி?

சென்னை: இந்த வாரம் துரந்தர் 2, யூத் படங்கள் வெளியாகி ரசிகர்களை தியேட்டர் பக்கம் வரவழைத்துள்ளன. அடுத்த வாரம் ஜி.வி. பிரகாஷின் ஹாப்பி ராஜ் படம் மார்ச் 27ம் தேதி வெளியாகிறது. பிரதீப் ரங்கநாதன் உதவி இயக்குநர் படம் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதன் பிறகு ஏப்ரல் 3ம் தேதி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் திரைக்கு வர காத்திருக்கிறது.

Pradeep Ranganathan and Vignesh Shivan why remains silent and didn t start promotions on LIK
Photo Credit:

லவ் டுடே, டிராகன், டியூட் என தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் ஹாட்ரிக் அடித்த நிலையில், LIK படத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. ஆனால், படக்குழு எந்தவொரு புரமோஷனையும் இன்னமும் ஆரம்பிக்காமல் அமைதி காப்பது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பின் வாங்கிய 2 படங்கள்: பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்துடன் மோதினால் வரக்கூடிய கொஞ்ச வசூல் கூட பாதிக்கும் என நினைத்து ஏப்ரல் 3 ரிலீஸ் என முன்னதாக அறிவித்த லெஜண்ட் சரவணாவின் லீடர் மற்றும் பரத்தின் காளிதாஸ் 2 உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 10ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன. தல வந்தா தள்ளிப்போய்த்தானே ஆகும் என சொன்ன பிரதீப் ரங்கநாதன் படம் இப்போ வருதுன்னு மற்ற படங்கள் எல்லாம் தள்ளிப் போகத் தொடங்கியுள்ளன.

ஏகப்பட்ட சிக்கல்: அஜித்தின் 62வது படத்தை இயக்க முடியாமல் போன நிலையில், பிரதீப் ரங்கநாதனின் 2வது படமாக ஆரம்பிக்கப்பட்ட படம் தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. ஆனால், டிராகன் மற்றும் டியூட் உள்ளிட்ட படங்களே அதன் பின்னர் ரெடியாகி ரிலீஸ் ஆகி 100 கோடி வசூலையும் ஈட்டின. கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட எல்ஐகே கடைசி நேரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக வெளியாகவில்லை. இந்த முறை கண்டிப்பாக ஏப்ரல் 3ம் தேதி படம் வெளியாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்னேஷ் சிவன் அமைதி: லெஜண்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவே இன்று நடைபெற வேண்டியது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 10 வெளியாகவுள்ள பரத்தின் காளிதாஸ் 2 டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. ஆனால், இன்னமும் பிரதீப் ரங்கநாதன் மற்றும் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் புரமோஷன் தொடர்பாக எந்த வேலையையும் ஆரம்பிக்கவே இல்லையே? ஏன்? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர். தேர்தலுக்கு முன்பாக விஜய் நடித்த ஜன நாயகன் படம் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால், சீமான் நடித்துள்ள எல்ஐகே சைலன்ட்டாக வெளியாகிறதே என்றும் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X