நடிகைகளுடன் லிப் லாக் சீன் வச்சே ஆகணும்.. லவ் டுடே முதல் LIK வரை.. ஜமாய்க்கும் பிரதீப் ரங்கநாதன்!

சென்னை: தனக்கு ஹீரோயின் எல்லாம் கிடைக்கவே இல்லை என ஆரம்பத்தில் பிரதீப் ரங்கநாதன் புலம்பினாலும், தற்போது அவருடன் நடிக்க ஏகப்பட்ட நடிகைகள் போட்டிப் போட்டுக் கொண்டிருப்பது தான் அவருடைய மார்க்கெட் உச்சத்தை காட்டுகிறது.

லவ் டுடே படத்திற்கு முன்னாடியே கோமாளி படத்திலேயே லிப் லாக் காட்சியை வைத்திருப்பார் பிரதீப் ரங்கநாதன். இளைஞர்கள் மத்தியில் பிசினஸ் ரீதியாக அந்த காட்சிகள் அமோகமாக வியாபாரம் ஆகும் என்பதை நன்றாக அறிந்து வைத்துள்ள அவர் தொடர்ந்து தான் ஹீரோவாக நடிக்கும் படங்களிலும் லிப் லாக் காட்சிகளை தாராளமாக வைத்து வருகிறார்.

Pradeep Ranganathan focussing on Lip Lock scenes from Comali to LIK

கிடைக்கிற கேப்பில் கிஸ் அடித்தாதான் உண்டு என்பது போல, லவ் டுடே முதல் நேற்று வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி வரை லிப் கிஸ் காட்சிகளில் தாராளம் காட்டி ஜமாய்த்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன் என சோஷியல் மீடியாவில் அவரது ரசிகர்களே ஸ்க்ரீன்ஷாட்டுகளை பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

ஆக்ஸிடன்ட்டல் லிப் லாக்: பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ரவி மோகன், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் ரவி மோகன் காஜல் அகர்வாலை கன்னத்தில் கிஸ் அடிக்க ட்ரை பண்ண அவரது உதட்டிலேயே முத்தம் கொடுத்து விடுவார். மாதர் சங்கமும் அந்த இடத்தில் வந்து பிரச்னையை பெரிதாக்கி விடும் என்கிற சீனை பிரதீப் ரங்கநாதன் வைத்திருப்பார்.

Pradeep Ranganathan focussing on Lip Lock scenes from Comali to LIK

லவ் டுடே: லிப் லாக் முத்தத்தை வைத்து ஒரு பாடலையே யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக்கியிருப்பார். ஹீரோயின் இவானாவுக்கு உதட்டில் முத்தம் கொடுக்க ஒவ்வொரு முறையும் பிரதீப் ரங்கநாதன் முயற்சிக்கும் போதெல்லாம் அவர் தனது கையை வாயில் வைத்து மறைப்பது போன்றே காட்சிகள் இடம்பெற்றிருக்கும். கடைசியாக உதட்டிலும் கொடுத்து விடுவார்.

கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன்: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் உடன் கல்லூரி காலத்தில் காதலிக்கும் காட்சியின் போது லிப் லாக் சீன் வரும். கயாடு லோஹர் உடன் "வழித்துணையே" பாடலின் கடைசியில் பிரான்ஸ் ஈஃபிள் டவர் முன்பாக பச்சக் என உதட்டிலேயே முத்த மழை பொழிந்து இருப்பார் பிரதீப் ரங்கநாதன்.

மமிதா பைஜுவையும் விடல: கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் மமிதா பைஜுவுடன் இணைந்து பிரதீப் ரங்கநாதன் நடித்திருப்பார். "சிங்காரி" பாடல் முடிந்து மமிதாவை பார்த்த உடனே லிப் கிஸ் அடிக்கப் போவார். ஆனால், அவர் தடுத்து விடுவார். அந்த படத்தில் பிரதீப்புக்கு மமிதா பைஜு ஜோடியே இல்லை என்பதால் லிப் கிஸ் காட்சி ஓரளவுக்கு வந்து மிஸ் ஆகிவிட்டது என்கின்றனர்.

எல்ஐகே படத்திலும் லிப் கிஸ்: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து ஏப்ரல் 10ம் தேதி வெளியான எல்ஐகே படத்தில் ஹீரோயின் காண்டம் ஆர்டர் பண்ணும் காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும், கெளரி கிஷன் உடன் லிப் லாக் அடிக்கும் காட்சி ஏகப்பட்ட முறை காட்டப்படுகிறது. ஆனால், அதற்கு பின்புலமாக கதையில் ஒரு ட்விஸ்ட் இருந்தாலும், இந்த படத்திலும் லிப் லாக் காட்சியில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X