பல ஹீரோயின்கள் ரிஜெக்ட் செய்தார்கள்.. ஃபீல் செய்த பிரதீப் ரங்கநாதன் ஓபன் டாக்
சென்னை: பிரதீப் ரங்கநாதன் இப்போது வளர்ந்துவரும் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். அவரது தோற்றம், நடிப்பு, டயலாக் டெலிவிரி அனைத்துமே ரொம்பவே சிம்ப்பிளாக இருப்பதால் ரசிகர்களிடம் எளிதாக கனெக்ட் ஆகிவிட்டார். இப்போது அவர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்திருக்கிறார்.மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK என்ற படத்திலும் நடித்துவருகிறார். இச்சூழலில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கோமாளி படத்தின் டீசண்ட்டான வரவேற்புக்கு பிறகு சில வருடங்கள் அமைதியாக இருந்த பிரதீப் ரங்கநாதன் தான் இயக்கிய குறும்படத்தை டெவலப் செய்து லவ் டுடே படத்தை இயக்கினார். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இவானா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இயக்குநர் பிரதீப் ரங்கநாதனே இதில் கதாநாயகனாகவும் நடித்தார். இந்தப் படம் அவர் கதாநாயகனாக அறிமுகமாகிய முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சேஷனல் லவ் டுடே: லவ் டுடே திரைப்படம் இளைஞர்களை குறிப்பாக 2K கிட்ஸை வெகுவாக கவர்ந்துவிட்டதாலும், காதலர்களுக்குள் நடக்கும் ஊடலையும், கூடலையும் தற்காலத்திற்கேற்ப காட்சிப்படுத்தியிருந்ததாலும் மெகா ஹிட்டானது. ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று திரைப்படத்தை ரசித்தனர். மேலும் படம் திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டு: இதற்கிடையே லவ் டுடே படத்தை பார்த்த ரஜினி பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டி சால்வை அணிவித்தார். அதுமட்டுமின்றி பிரதீப் ரங்கநாதனிடம் தனக்கு ஒரு கதை செய்ய ரஜினி சொன்னதாகவும் தகவல் பரவியது. மேலும் படமானது ஹிந்தியில் ரீமேக்காகிறது. இந்தப் படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன் ரொம்பவே பிரபலமாகிவிட்டார்.
நடிகர்: லவ் டுடே படத்துக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்திருக்கிறார். படமானது 21ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அதேபோல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK படத்திலும் நடிக்கிறார் பிரதீப் ரங்கநாதன். சூழல் இப்படி இருக்க டிராகன் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. அந்தவகையில் சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் ஒரு பேட்டி கொடுத்தார்.
பிரதீப் ரங்கநாதன் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "என்னுடன் நடிப்பதற்கு நடிகைகள் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள்.லவ் டுடே படத்துக்காக பல நடிகைகளை அணுகி கதை சொன்னேன். ஆனால் யாருமே ஓகே சொல்லவில்லை. ரிஜெக்ட் மட்டுமே செய்தார்கள்" என்றார். முன்னதாக ஐந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருந்த லவ் டுடே 100 கோடி ரூபாய்வரை வசூலித்து செம சாதனை செய்தது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











