வரிசையாக 3 படங்கள் 100 கோடி ரூபாய் வசூல்.. பிரதீப் ரங்கநாதன் சம்பளம் இத்தனை கோடியா?.. ஆத்தாடி

சென்னை: கோமாளி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அப்படம் சூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக தானே ஹீரோவாக நடித்து லவ் டுடே படத்தை இயக்கினார். அது மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி நூறு கோடி ரூபாயை வசூலித்தது. தொடர்ந்து அவர் நடித்த டிராகன், ட்யூட் ஆகிய படங்களும் மெகா ஹிட்டாகி 100 கோடி ரூபாய் வசூலித்தது. இதனால் கோலிவுட்டில் குறுகிய காலத்திலேயே சென்சேஷனல் ஹீரோவாக மாறிவிட்டார். இந்நிலையில் அவரது சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்லன.

குறும்படங்கள் இயக்கி பிறகு வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ரவி மோகனை வைத்து அவர் இயக்கிய முதல் படமான கோமாளி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இரண்டாவது படமாக லவ் டுடேவை இயக்கினார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த அப்படத்தில் தானே ஹீரோவாகவும் களமிறங்கியிருந்தார் பிரதீப். ஜென் ஸி தலைமுறையினருக்கு படம் ரொம்பவே கனெக்ட் ஆகிவிட்டதன் காரணமாக இதுவும் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூலித்து அசத்தியது.

Pradeep Ranganathan Hikes Salary to 50 Crore After Back-to-Back Hits
Photo Credit:

டிராகன், ட்யூட்: லவ் டுடே பெற்ற பிரமாண்ட வெற்றிக்கு பிறகு தனது கல்லூரி சீனியர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்தார். அதனையும் ஏஜிஎஸ் நிறுவனம்தான் தயாரித்திருந்தது. பிரதீப் ஹீரோவாக நடித்து முதல் படமான லவ் டுடே ஏதோ ஃப்ளூக்கில் ஓடிவிட்டது; இதெல்லாம் கண்டிப்பாக கவிழ்ந்துவிடும் என்று ஆரூடம் சொன்னார்கள். ஆனால் தான் லவ் டுடேவில் வென்ற ஃப்ளூக்கில் இல்லை திறமையில்தான் என்பதை டிராகன் படத்தில் தனது நடிப்பின் மூலம் நிரூபித்தார். அதுவும் 100 கோடி ரூபாய் வசூலித்தது. மூன்றாவதாக நடித்த ட்யூட் படமும் 100 கோடி ரூபாய் வசூலித்தது.

டாப் 10 ஹீரோக்களில்: வரிசையாக மூன்று படங்கள் நூறு கோடி ரூபாயை வசூலித்ததை பார்த்து ஒட்டுமொத்த திரைத்துறையும் ஆச்சரியத்தில் மூழ்கியது. குறிப்பாக பிரதீப்பின் மார்க்கெட்டும் சரசரவென்று உயர்ந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். சொல்லப்போனால் அவர் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக மாறிவிட்டார். குறைவான காலத்திலேயே இப்படி ஒரு இடத்தை பிடித்திருப்பதால்; அதனை தக்க வைக்க இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை பிரதீப் உணர்ந்தே இருக்கிறார். எனவே தான் நடிக்கும் படத்தின் கதைகளை கவனத்துடன் தேர்ந்தெடுக்கிறார். அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் எல்ஐகே படம் வருகிறது.

Also Read
விஜய்யுடன் அந்த நடிகையை பார்க்கும்போது.. மனம் திறந்து பேசிய சங்கீதா.. ஓபனா சொல்லிருக்காங்க
விஜய்யுடன் அந்த நடிகையை பார்க்கும்போது.. மனம் திறந்து பேசிய சங்கீதா.. ஓபனா சொல்லிருக்காங்க

இயக்குநர் அவதாரம் எப்போது?: அவர் நடிகராக கலக்குவதால்; அவருக்குள் இருக்கும் இயக்குநரை ஒதுக்கி வைத்துவிடுவாரோ என்று ரசிகர்களிடம் கேள்வி எழுந்திருக்கிறது. ஆனால் அவர் அப்படி எந்த ஐடியாவிலும் இல்லை என்றே தெரிகிறது. ஹீரோவாக நடிக்க வேண்டிய சில படங்களை முடித்துவிட்டு மீண்டும் இயக்குநர் ஆகவிருக்கிறார் என்றும்; அந்தக் கதை பிரமாண்ட பட்ஜெட்டில் சைன்ஸ் ஃபிக்‌ஷன் ஜானரில் உருவாகும் எனவும் தெரிகிறது. இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே தயாரிக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் குரல்கள் கேட்கின்றன.

சம்பளத்தை உயர்த்திய பிரதீப்?: இந்நிலையில் அந்தப் படம் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் நடிப்பதற்காக பிரதீப் 50 கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயித்திருப்பதாகவும்; மைத்ரி மூவி மேக்கர்ஸும் அந்தத் தொகையை கொடுக்க ஒத்துக்கொண்டுவிட்டதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன. மூன்று படங்கள் வரிசையாக ஹிட் கொடுத்த பிரதீப் சம்பளத்தை தாறுமாறாக ஏற்றிவிட்டாரே என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X