காட்டுல செம மழை போங்க.. பிரதீப் ரங்கநாதன் வாங்கும் சம்பளம் இவ்வளவா?
சென்னை: பிரதீப் ரங்கநாதன் இப்போது வளர்ந்துவரும் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். அவரது தோற்றம், நடிப்பு, டயலாக் டெலிவிரி அனைத்துமே ரொம்பவே சிம்பிளாக இருப்பதால் ரசிகர்களிடம் எளிதாக கனெக்ட் ஆகிவிட்டார். இப்போது அவர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் எல்ஐகே படத்தில் கமிட்டாகி நடித்துவருகிறார். அடுத்ததாக ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் அஸ்வத் இயக்கத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் அவர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
கோமாளி படத்தின் டீசண்ட்டான வரவேற்புக்கு பிறகு சில வருடங்கள் அமைதியாக இருந்த பிரதீப் ரங்கநாதன் தான் இயக்கிய குறும்படத்தை டெவலப் செய்து லவ் டுடே படத்தை இயக்கினார். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இவானா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இயக்குநர் பிரதீப் ரங்கநாதனே இதில் கதாநாயகனாகவும் நடித்தார். இந்தப் படம் அவர் கதாநாயகனாக அறிமுகமாகிய முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சேஷனல் லவ் டுடே: லவ் டுடே திரைப்படம் இளைஞர்களை குறிப்பாக 2K கிட்ஸை வெகுவாக கவர்ந்துவிட்டதாலும், காதலர்களுக்குள் நடக்கும் ஊடலையும், கூடலையும் தற்காலத்திற்கேற்ப காட்சிப்படுத்தியிருந்ததாலும் மெகா ஹிட்டானது. ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று திரைப்படத்தை ரசித்தனர். மேலும் படம் திரையரங்குகளில் 100 நாள்கள் ஓடி சாதனை படைத்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டு: இதற்கிடையே லவ் டுடே படத்தை பார்த்த ரஜினி பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டி சால்வை அணிவித்தார். அதுமட்டுமின்றி பிரதீப் ரங்கநாதனிடம் தனக்கு ஒரு கதை செய்ய ரஜினி சொன்னதாகவும் தகவல் பரவியது. மேலும் படமானது ஹிந்தியில் ரீமேக்காகிறது. இந்தப் படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன் ரொம்பவே பிரபலமாகிவிட்டார்.
நடிகர்: லவ் டுடே படத்துக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தில் நடித்துவருகிறார். அஜித்தை வைத்து இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன் அதிலிருந்து வெளியேறிய பின் இப்படத்தை இயக்குவதால் இதன் கதை மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க; எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் முக்கிய ரோலில் கமிட்டாகியிருக்கின்றனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகின்றன.
அடுத்த படம்: எல்ஐகே படத்துக்கு பிறகு ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இந்நிலையில் அவர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அஸ்வத் இயக்கத்தில் இவர் நடிக்கும் டிராகன் படத்துக்கு 12 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்தத் தகவல் ரசிகர்ளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











