முதல் படத்துக்கு கம்மி சம்பளம்.. இப்போ பிரதீப் ரங்கநாதனுக்கு இத்தனை கோடி கொடுக்க ரெடியா இருக்காங்களா!

சென்னை: சினிமாவில் சில பேர் ஜாவா சுந்தரேசன் போல அதிரடியாக வளர்ச்சியடையாவர்கள். சிலர் ஒவ்வொரு அடியும் பலமாக எடுத்து வைத்து சூப்பரான அஸ்திவாரம் அமைத்து தங்களை நிலைநாட்டிக் கொள்வார்கள். ஒரு சில வாரிசு நடிகர்கள் ஈஸியாக மொட்டை மாடிக்கே குடித்தனம் வைத்தாலும், அதன் பின்னர் எந்தவொரு வளர்ச்சியும் காண முடியாமல் கடைசியில் அப்பாவால் தான் வளர முடியவில்லை என நொண்டி சாக்கு சொல்வார்கள்.

பிரதீப் ரங்கநாதனின் வளர்ச்சி லோகேஷ் கனகராஜ், அட்லி வளர்ச்சி போல செம ஸ்பீடாக ஜெட் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கிறது. ரவி மோகனை வைத்து வேல்ஸ் நிறுவனத்தில் கோமாளி படம் பண்ணிய போது லட்சத்தில் சம்பளம் வாங்கிய அவர் தற்போது தொடர்ந்து 100 கோடி நாயகனாக மாறியுள்ள நிலையில், தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை தாண்டி தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் எல்லாம் பல கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Pradeep Ranganathan salary graph hikes 50 lakhs to 25 Crores within 7 years
Photo Credit:

பிரதீப் ரங்கநாதனின் சம்பள விவரங்கள் மற்றும் அவரது படங்கள் மற்றும் அசுரவேக வளர்ச்சி குறித்து இங்கே அலசலாம் வாங்க..

கோமாளி படத்திற்கு வாங்கிய சம்பளம்: பெரும்பாலும் தமிழ் சினிமாவில் முதல் படம் எடுக்கும் இயக்குநருக்கு பெரிதாக சம்பளமே தருவதில்லை என்பது தான் நிதர்சனம். சில இயக்குநர்களுக்கு ஓரளவுக்கு சம்பளம் கிடைத்து விடுகிறது. அதிலும் படம் வெற்றிப் பெற்று வசூல் வந்தால் தான் சம்பளம் கொடுக்கின்றனர். கோமாளி படம் ரவி மோகனுக்கு நல்ல வெற்றிப் படமாக அமைந்த நிலையில், அந்த படத்தை எழுதி இயக்கிய பிரதீப் ரங்கநாதனுக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹீரோவா நடிச்சே லட்சத்தில் தான் சம்பளம்: ஏஜிஎஸ் நிறுவனத்தில் லவ் டுடே படத்தை இயக்கி பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாகவும் நடித்தார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த அவருக்கு 80 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், படத்தை இயக்கியதற்காக இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு 70 லட்சம் சம்பளம் என மொத்தமாக 1.5 கோடி சம்பளம் கிடைத்ததாம்.

அப்படியே உச்சத்துக்கு: லவ் டுடே படத்தின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றிக்குப் பிறகு டிராகன் படத்தில் ஹீரோவாக நடிக்க மட்டுமே பிரதீப் ரங்கநாதனுக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது என தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த படம் 150 கோடி வரை வசூல் ஈட்டித் தந்த நிலையில், அடுத்த படத்திலும் அவரது சம்பளம் டாப் கியரில் சென்றுவிட்டது.

இத்தனை கோடி கொடுக்க ரெடி: கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து கடந்த தீபாவளிக்கு வெளியான டியூட் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்தது. அந்த படத்தில் ஹீரோவாக மட்டும் நடிக்க பிரதீப் ரங்கநாதனுக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் பிரதீப் ரங்கநாதனுக்கு 25 கோடி முதல் 30 கோடி வரை சம்பளத்தை உயர்த்திக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்றும் அவரது கால்ஷீட்டுக்காக பல பெரிய கம்பெனிகள் காத்துக் கிடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 7 ஆண்டுகளில் 50 லட்சம் முதல் 25 கோடி என்கிற அளவுக்கு தனது உழைப்பால் உயர்ந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். அவரது எல்ஐகே படத்துக்காக ரசிகர்கள் ரொம்ப வருஷமா காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X