புரோட்டாவும் பீஃப் கறியும் என்னோட ஃபேவரைட்.. கேரளாவில் கால் வைத்ததும் பிரதீப் ரங்கநாதன் பளீச்

சென்னை: தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகர்களில் வசூல் மன்னனாக இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக கால் பதித்தவர், இன்றைக்கு கதாநாயகனாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். குறிப்பாக தனது இரண்டாவது படத்தில் தானே கதாநாயகனாக நடித்து இயக்கவும் செய்திருந்தார். லவ் டுடே என்ற அந்த படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படி இருக்கும்போது அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இந்த ஆண்டில் மட்டும் இரண்டு படங்கள் வெளியானது. பிப்ரவரி மாதத்தில் டிராகன் படமும், தீபாவளிக்கு டியூட் படமும் வெளியானது. இரண்டு படங்களும் வணிக ரீதியாக ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இதில் டிராகன் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர் செய்யும் விதமாக இருந்தது.

அதேபோல் டியூட் படம் பல முற்போக்கு அரசியல் தலைவர்களாலும் சமூக செயல்பாட்டாளர்களாலும் பாராட்டுகளைப் பெற்றது. இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும், படத்தை திரையிடக்கூடாது என்று சில வலது சாரி அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்தனர். ஆனால் படம் அட்டகாசமாக ஓடி, ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

Pradeep Ranganathan Says His Favourite Kerala Food is Beef And Parotta
Photo Credit:

பரோட்டாவும் பீஃப் கறியும்: இப்படி இருக்கும்போது நடிகர் பிரதீப் ரங்கநாதன் கேரளாவுக்கு வேலை நிமித்தமாக செல்லும் போது, விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர் அவரை வீடியோ எடுக்கிறார். அப்போது அந்த ரசிகர், அண்ணா கேரளா உணவு சாப்பிடுவீங்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பிரதீப் ரங்கநாதனோ, நான் புரோட்டாவும் பீஃப் கறியும் சாப்பிடலாம் என்று இருக்கிறேன் என்று பதில் அளித்தார். உடனே கட்டாயம் சாப்பிடுங்கள் என்று கூறுகிறார். அதற்கு பிரதீப் ரங்கநாதன், அது எனது ஃபேவரைட் உணவு என்று கூறுகிறார். அடுத்ததாக அந்த ரசிகர், மலபார் பிரியாணியும் சாப்பிட்டு பாருங்கள் நன்றாக இருக்கும் என்று கூறுகிறார். அதற்கு பிரதீப் ரங்கநாதன் தனது கட்டை விரலை உயர்த்திக் காட்டி சரி என்று கூறுகிறார்.

இணையவாசிகள் ரியாக்‌ஷன்: இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகளும் ரசிகர்களும் அடடே பரோட்டாவும் பீஃப் கறியும் செம்மையாக இருக்குமே என்று பதிவிட்டு வருகிறார்கள். மேலும் சில இணையவாசிகள், பிரதீப் ரங்கநாதன் மாட்டுக் கறி சாப்பிடுகிறார், அவர் சனாதன தர்மத்திற்கு எதிரானவராக உள்ளார். அவரைப் போன்றவர்களை ஆதரிக்க கூடாது என்று பதிவிடுபவர்களையும் பார்க்க முடிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X