சிம்பு சார் நீங்கள் மாஸ் சார்.. மனம் நிறைந்து பாராட்டிய இளம் நடிகர்.. என்னாச்சு தெரியுமா?
சென்னை: சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான பத்து தல திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இருப்பினும் அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்தப் படத்துக்கு முன்னதாக அவர் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு, மாநாடு ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருந்தன. தற்போது அவர் கமலுடன் தக் லைஃப் படத்தில் நடிக்கிறார். அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
சின்ன வயதிலிருந்தே சினிமாக்களில் நடித்துவருபவர் சிம்பு. நடிகைகள் நயன்தாரா மற்றும் ஹன்சிகாவை காதலித்தார். அந்தக் காதல் பிரேக்கப்பில் முடிந்தது. இதனையடுத்து சிங்கிளாக இருந்தார். இதற்கிடையே ஹன்சிகாவுடனான காதல் முறிவுக்கு பிறகு சிம்பு முழுக்க ஆன்மீக வழியில் சென்றார். அப்படி இருக்கையில் அவர் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தார். உடல் எடை வேறு கூடிவிட்டது. இதனால் சிம்புவின் சேப்டர் இனி அவ்வளவுதான் என்று பலரும் கூறினார்கள்.

தரமான கம்பேக்: சிம்பு எப்படியாவது பழையபடி வந்துவிட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார் எஸ்டிஆர். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. அதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். டைம் லூப் கான்செப்ட்டில் உருவாகியிருந்த மாநாடு மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி நூறு கோடி ரூபாய்வரை வசூல் செய்து கெத்து காண்பித்தது.
பழைய சிம்பு: அந்தப் படத்தின் மெகா ஹிட் அவரையும் அவரது ரசிகர்களையும் உற்சாகத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றது. அந்த வெற்றிக்கு பிறகு சிம்பு பழைய எனர்ஜியோடு இருக்கிறார். அதே எனர்ஜியோடு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார். அந்தப் படமும் சூப்பர் ரெஸ்பான்ஸை பெற்றது. இதனால் இனி சிம்புவின் ஆட்டம் ஆரம்பம் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறினார்கள். ஆனால் அடுத்ததாக நடித்த பத்து தல சறுக்கியது. இருப்பினும் எஸ்டிஆரின் நடிப்பு அருமையாக இருந்தது.

அடுத்த படங்கள்: அவர் இப்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் ஹீரோவாக நடிக்கும் தக் லைஃப் படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். இதுதவிர்த்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்கும் சிம்பு; ஓ மை கடவுளே, டிராகன் படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் நடிக்கிறார். அதுமட்டுமின்றி நரன் எழுதிய கதையை மையமாக வைத்து சுதா கொங்கரா உருவாக்கவிருக்கும் படத்திலும் நடிக்கிறார். இது அவருக்கு 50ஆவது படமாகும்.
பிரதீப் ரங்கநாதன் ட்வீட்: இப்படி நடிப்பில் பிஸியாக இருக்கும் மீண்டும் பாடவும் ஆரம்பித்திருக்கிறார். அதாவது அஸ்வத் மாரிமுத்து இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் படத்தை இயக்குகிறார். அதில் ஏன் டி என்னை விட்டுப்போன என்ற பாடலை சிம்பு பாடியிருக்கிறார். இதுதொடர்பான ப்ரோமோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பிரதீப் ரங்கநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில், "வேறு ஒருத்தரின் படத்துக்கு ப்ரோமோஷன் செய்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது?.. என்ன கிடைக்கும் என்று யோசிக்காமல், என்ன கொடுக்கலாம் என்று யோசிக்கிறவன் மாஸ். நீங்கள் மாஸ் சிம்பு சார்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











