Dude Trailer: தாலிக்கு எந்த மரியாதையும் இல்லை.. பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜுவின் டியூட் டிரைலர் இதோ!

சென்னை: சுதா கொங்கராவின் உதவி இயக்குநரான கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள டியூட் படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியானது. இந்த தீபாவளிக்கு ஹரிஷ் கல்யாணின் டீசல், துருவ் விக்ரமின் பைசன் மற்றும் நட்டி நட்ராஜின் கம்பி கட்ன கதை உள்ளிட்ட படங்களுடன் போட்டியாக டியூட் வெளியாகிறது.

தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட விக்னேஷ் சிவனின் எல்ஐகே படம் டிசம்பர் 18ம் தேதிக்கு தள்ளிப்போனது. இந்த ஆண்டு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் படம் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், டியூட் படத்தின் டிரைலரை பார்க்கும் போதே தீபாவளி வின்னர் இந்த படம் தான் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Pradeep Ranganathan Theri performance and Rajinikanth style Punches in Dude Trailer
Photo Credit:

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்திஸ்வரன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். சாய் அபயங்கர் இசையில் வெளியாகும் முதல் தமிழ் படம் டியூட் தான். சமீபத்தில் மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளியான பல்டி திரைப்படம் பெரிதாக ஓடவில்லை.

டியூட் டிரைலர் ரிலீஸ்: கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் டிரகான் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்த ரெடியாகி விட்டார் பிரதீப் ரங்கநாதன். ரஜினிகாந்த் இளம் வயதில் இருந்திருந்தால் அவரை தான் இந்த படத்தின் ஹீரோவாக ஆக்கியிருப்பேன் என்று கூறிய கீர்த்தீஸ்வரன் இளமை துள்ளல் உடன் டியூட் படத்தை இயக்கியுள்ளார். டிரைலர் முழுவதும் லவ் டுடே, டிராகன் படங்களை போல ஒட்டுமொத்தமாக வைபாகவே எடிட் செய்த எடிட்டருக்கும் நிச்சயம் பாராட்டுக்கள்.

Pradeep Ranganathan Theri performance and Rajinikanth style Punches in Dude Trailer
Photo Credit:

மாமா பொண்ணு மமிதா: பிரேமலு படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்த மமிதா பைஜு ஜி.வி.பிரகாஷின் ரெபல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. ஆனால், ஏகப்பட்ட தமிழ் பட வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. விஜய்யுடன் ஜன நாயகன், சூர்யாவுடன் வெங்கி அட்லூரி படம், விஷ்ணு விஷால் உடன் இரண்டு வானம் என பல படங்களில் நடித்து வரும் மமிதா பைஜு டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதனின் மாமா பொண்ணாக நடித்துள்ளார்.

தாலிக்கு எந்த மரியாதையும் இல்லை: டியூட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே தாலியுடன் பிரதீப் ரங்கநாதன் நிற்கும் போஸ்டர் தான் வெளியானது. இந்நிலையில், டிரைலரிலும் தாலி டயலாக் இடம்பெற்றுள்ளது. டிரைலரில், என்ன இருந்தாலும் தாலிக்கு மரியாதை இல்லையா? என சரத்குமார் கேட்க, "தாலிக்கு மரியாதை இல்லை.. அதுக்கு பின்னாடி இருக்கும் பெண்ணொட ஃபீலிங்ஸுக்குத்தான் மரியாதை" என பிரதீப் ரங்கநாதன் பன்ச் வசனம் பேசி ஸ்கோர் செய்துள்ளார். மேலும், ரஜினிகாந்த் ஸ்டைலில், ஃப்ரன்ட்ல வச்ச கால பேக்ல வைக்க மாட்டேன்" என்றும் பன்ச் வசனம் பேசியுள்ளார்.

டியூட் தீபாவளி: ஹரிஷ் கல்யாணின் டீசல், துருவ் விக்ரமின் பைசன் உள்ளிட்ட படங்கள் ஸ்ட்ராங்கான கதையுடன் இந்த தீபாவளிக்கு வெளியானாலும் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜுவின் ஜாலியான படம் கமர்ஷியல் வெற்றியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரைலரை பார்த்த ரசிகர்கள் இந்த தீபாவளி டியூட் தீபாவளி தான் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X