பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் இதுவா?.. இயக்குநர் யார் தெரியுமா?.. அட சூப்பரா இருக்குமே ப்பா
சென்னை: பிரதீப் ரங்கநாதனுக்கு இந்த வருடத்தில் வெளியான இரண்டு படங்களுமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி நூறு கோடி ரூபாய் வசூலை அள்ளியது. அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்.ஐ.கே படத்தில் நடித்திருக்கிறார். படம் எப்போது ரிலீஸாகும் என்று தெரியவில்லை. இந்நிலையில் அவர் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கோமாளி படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ரவி மோகன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. 90ஸ் கிட் ஒருவர் இந்த தலைமுறையை எப்படி அணுகுகிறார்; அவருக்கு இருக்கும் அசௌகரியம் என்ன?.. இத்தலைமுறையில் இருக்கும் மைனஸ்கள் என்ன என்பதை புட்டு புட்டு வைத்திருந்தார். இதன் காரணமாக படம் பலரிடம் எளிதாக கனெக்ட் ஆகி வெற்றியடைந்துவிட்டது.
லவ் டுடே: அந்தப் படத்துக்கு பிறகு தானே ஹீரோவாக நடிக்கும் முடிவை எடுத்த அவர்; ஏஜிஎஸ் தயாரிப்பில் லவ் டுடே படத்தை இயக்கி நடித்தார். அவருடன் இவானா, சத்யராஜ், யோகிபாபு என பலர் நடித்திருந்த அந்தப் படமும் மெகா ஹிட்டானது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்ட அப்படம் 100 கோடி ரூபாய் வசூலித்து கெத்து காண்பித்தது. இயக்கத்துக்கு மட்டுமின்றி ஹீரோவாக அவர் நடித்ததற்கும் சூப்பர் ரெஸ்பான்ஸ் கிடைத்ததால் தொடர்ந்து ஹீரோவாக நடிக்கும் முடிவுக்கு வந்தார்.

ஒரே வருடத்தில் இரண்டு மெகா ஹிட்டுகள்: அதன்படி அவரது காலேஜ் சீனியரும், ஓ மை கடவுளே படத்தின் இயக்குநருமான அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடித்த டிராகன் இந்த வருடம் வெளியாகி ஹிட்டாகி 100 கோடி ரூபாயை அள்ளியது. அதனையடுத்து கீர்த்திஸ்வரன் என்ற அறிமுக இயக்குநர் எடுத்த டியூட் படத்தில் நடித்தார். இப்படமும் மெகா ஹிட்டாகி 100 கோடி ரூபாய் வசூலித்தது. இப்படி ஒரே வருடத்தில் இரண்டு முறை 100 கோடி ரூபாய் வசூலித்த ஹீரோ என்ற பெயரை பெற்றிருக்கிறார்.
எல்ஐகே தாமதம்: இரண்டு படங்களின் மெகா வெற்றியும் அவரை உற்சாகத்தின் உச்சத்தில் வைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த வெற்றி வைபை தவறவிடக்கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறார். அதேசமயம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) இன்னமும் ரிலீஸாகாமல் இருக்கிறது. பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் ரிலீஸ் ஆகாமல் தள்ளிக்கொண்டே போகிறது. சூழல் இப்படி இருக்க புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
அடுத்த படம்: அதன்படி பிரதீப் ரங்கநாதன் ஒரு படத்தை தானே இயக்கி நடிக்கவிருக்கிறாராம். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும்; இது சைன்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் என்றும் கூறப்படுகிறது. அநேகமாக இன்னும் சில மாதங்களில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட தயாரிப்பு நிறுவனம் வெளியிடலாம் என்று தெரிகிறது. இதற்கிடையே அஸ்வத் மாரிமுத்து - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் மீண்டும் இன்னொரு படத்தை தயாரிக்கும் முடிவிலும் ஏஜிஎஸ் நிறுவனம் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











