தொடர்ச்சியாக 3 மெகா ஹிட்டுகள்.. ரூட்டை மாற்றும் பிரதீப் ரங்கநாதன்?.. திடீர்னு என்னாச்சு?

சென்னை: கோமாளி படத்தில் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் இப்போது டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். லவ் டுடே, டிராகன், டியூட் ஆகிய மூன்று படங்களும் 100 கோடி ரூபாய் வசூலித்து கெத்து காண்பித்தது. அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்ப்பெனி படத்தில் நடித்திருக்கும் அவர் மீண்டும் படம் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ரவி மோகன் நடித்த கோமாளி படத்தை இயக்கி திரைத்துறையில் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து இயக்குநராக தனது பயணத்தை தொடர்வார் என்று எதிர்பார்த்த சூழலில் இரண்டாவது படமான லவ் டுடேவை இயக்கி ஹீரோவாக அறிமுகமானார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. அவர் ஹீரோவாக மாறியதை பலரும் கிண்டல்தான் செய்தார்கள்.

மெகா ஹிட்: ஆனால் அந்த கிண்டல்களுக்கு எல்லாம் வெற்றியின் மூலமும், தனது சிறந்த நடிப்பின் மூலமும் பதிலடி கொடுத்தார். படம் மெகா ஹிட்டாகி 100 கோடி ரூபாய் வசூலித்தது. 2கே கிட்ஸுகளுக்கு தேவையான அத்தனை விஷயங்களையும் படத்தில் வைத்திருந்ததால் எதிர்பார்த்ததைவிடவும் நிறைய ரெஸ்பான்ஸ் கிடைத்தது. மேலும் பிரதீப்பையும் ஹீரோவாக அக்செப்ட் செய்துகொண்டார்கள் ரசிகர்கள்.

Pradeep Ranganathan to Turn Director Again New Project with AGS Films Creates Buzz
Photo Credit:

டிராகனும் ஹிட்: ஹீரோவாக முதல் படத்திலேயே வெற்றியடைந்த பிரதீப் அடுத்ததாக தனது கல்லூரி சீனியரும் ஓ மை கடவுளே பட இயக்குநருமான அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடித்த டிராகனும் மெகா ஹிட்டானது. இதுவும் ஜாலியான ஜானரில் உருவானாலும் சமூகத்துக்கும் இப்போதைய இளைஞர்களுக்கும் தேவையான கருத்தை வைத்திருந்தார்கள். இதுவும் 100 கோடி வசூலிக்க; மூன்றாவதாக நடித்த டியூடும் அதே ரிசல்ட்டை பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

உச்சத்தில் பிரதீப் மார்க்கெட்: இப்படி ஹீரோவாக நடித்த மூன்று படங்களுமே மெகா ஹிட்டாகி 100 கோடி ரூபாய் வசூலித்ததன் காரணமாக அவரது மார்க்கெட் உச்சத்துக்கு சென்றுவிட்டது. முக்கியமாக டாப் 10 ஹீரோக்கள் லிஸ்ட்டில் அவர் இணைந்தும்விட்டார். அவரை நம்பி பணத்தை போட்டால் முதலுக்கு மோசமில்லை என்ற நிலை உருவாகிவிட்டதால் பல இயக்குநர்கள் அவரை மனதில் வைத்து கதை எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

மீண்டும் இயக்குநர்?: போகிற போக்கை பார்த்தால் தொடர்ச்சியாக ஹீரோவாக மட்டுமே அவர் நடிப்பார் என்ற பேச்சும் எழுந்திருந்தது. இந்நிலையில் அவர் பற்றி புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கப்போகிறாராம். அந்தப் படத்தையும் லவ் டுடே, டிராகன் ஆகிய படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும் அவரே ஹீரோவாகவும் நடிக்கிறார் என்றும்; இன்னும் மூன்று வாரங்களுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X