அடுத்து அடுத்து 2 படங்கள் வருது.. குட் பேட் அக்லி வசூல் சாதனையை முறியடிப்பாரா பிரதீப் ரங்கநாதன்?

சென்னை: பாலிவுட்டில் கடந்த 2023ம் ஆண்டு தொடர்ந்து 3 மெகா ஹிட் படங்களை ஷாருக்கான் கொடுத்து மாஸ் காட்டினார். சில வருடங்கள் சினிமாவில் இருந்து சின்ன பிரேக் எடுத்துக் கொண்டு மீண்டும் வெறித்தனமான கம்பேக் கொடுத்திருந்தார். பதான் திரைப்படம் 1000 கோடி வசூலையும் ஜவான் படம் 1100 கோடி வசூலையும், டன்கி திரைப்படம் 500 கோடி வசூல் என ஒரே ஆண்டில் மிகப்பெரிய வசூல் சாதனையை நடத்தி பாலிவுட்டை மீண்டும் தலைநிமிரச் செய்தார்.

கோலிவுட்டில் இந்த ஆண்டு ஏற்கனவே டிராகன் படத்தை கொடுத்த பிரதீப் ரங்கநாதன் இந்த ஆண்டு அடுத்தடுத்து 2 படங்களை களமிறக்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில், அவரது மார்க்கெட் மேலும், உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pradeep Ranganathan will beat Ajith Kumar s Good Bad Ugly

அஜித் குமாரின் 62வது படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைக்காமல் போன நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள எல்ஐகே படம் குட் பேட் அக்லி படத்தின் வசூல் சாதனையை முறியடிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

டல்லடிக்கும் தமிழ் சினிமா: இந்த ஆண்டு தொடங்கி 5 மாதங்கள் ஆகின்றன. இதுவரை அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி படம் மட்டுமே 200 கோடி ரூபாய் வசூலை பாக்ஸ் ஆபீஸில் ஈட்டியிருப்பதாக அறிவித்துள்ளனர். ஆனால், அந்த படமும் பெரிய லாபத்தை தயாரிப்பு நிறுவனத்துக்கு கொடுக்கவில்லை என்கின்றனர். இந்தியில் வெளியான சாவா திரைப்படம் மட்டுமே இந்த ஆண்டு 500 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது. மலையாளத்தில் மோகன்லால் நடித்த எம்புரான் மற்றும் தொடரும் என 2 படங்களுமே 200 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் தான் இதுவரை பெரிதாக எந்த படமும் வசூல் வேட்டை நடத்தவில்லை என்கின்றனர்.

குறைந்த பட்ஜெட்டில் அதிக வசூல்: ஒரு படம் தயாரிப்பாளருக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் நிறைவான வசூலை எப்போது தருமென்றால் குறைவான பட்ஜெட்டில் அந்த படம் எடுக்கப்பட்டு அதிக வசூல் வேட்டையை நடத்தும் போதுதான் என்கின்றனர். டிராகன் திரைப்படம் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 37 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி பாக்ஸ் அபீஸில் மட்டும் 150 கோடி வசூலை ஈட்டியது. அதன் ஓடிடி உரிமம், சாட்டிலைட் உரிமம் என ஏகப்பட்ட லாபம் அந்த படத்துக்கு கிடைத்தது என்கின்றனர்.

அடுத்தடுத்து 2 படங்கள்: கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் 300 கோடி வசூலை சாத்தியமாக்கியது. இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே 150 கோடி வசூலை அள்ளிய பிரதீப் ரங்கநாதன் செப்டம்பர் 18ம் தேதி எல்ஐகே படத்தை ரிலீஸ் செய்கிறார். மேலும், தீபாவளிக்கு டூட் படத்தை வெளியிட காத்திருக்கிறார். அடுத்தடுத்து 2 படங்கள் வெளியாகவுள்ள நிலையில், டிராகன் படத்தின் வெற்றியைத் தாண்டி மேலும், ஒரு பெரிய வெற்றியை பிரதீப் ரங்கநாதன் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pradeep Ranganathan will beat Ajith Kumar s Good Bad Ugly

குட் பேட் அக்லி வசூலை முந்துவாரா?: தல வந்தா தள்ளிப்போகணும்னு சொல்லிவிட்டு லேட்டா வந்தாலும் அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தை விட அதிக வசூலை ஈட்டிய பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தின் வசூலை இந்த 2 படங்களில் முந்துவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. எப்படி இருந்தாலும் இந்த ஆண்டு பிரதீப் ரங்கநாதன் 3 படங்களின் வசூல அஜித் குமாரின் 2 படங்களின் வசூலை கடக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X