பிரதீப் ரங்கநாதன் கல்லூரியில் வாங்கின மார்க்க பார்த்தீங்களா?.. கதை அடிக்காதேன்னு கண்டித்த டீச்சர்!

சென்னை: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கல்லூரி மாணவராக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இந்த படத்தில் 48 அரியர் வைத்த கல்லூரி மாணவனாக பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். படத்தின் டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் டான் படம் போலவே இருப்பதாகவே கலாய்த்தனர். ஆனால், இது வேற படம் என இயக்குநர் விளக்கம் கொடுத்தார்.

இளைஞர்களை கெடுக்கும் மோசமான நபராக பிரதீப் ரங்கநாதன் வலம் வருகிறார். இப்படியெல்லாம் தவறான முன்னுதாரணத்தை படிக்கும் மாணவர்கள் மனங்களில் விதைக்க கூடாது என அவருக்கு எதிரான கண்டனங்களும் கடுமையாகவே குவிந்து வருகிறது.

Pradeep Ranganathan Dragon hero

இந்நிலையில், கல்லூரியில் படிக்கும் போது தேர்வு ஒன்றில் கதையடித்து மாட்டிக் கொண்ட தனது மார்க் ஷீட்டை போட்டோ எடுத்து தற்போது அதனையே படத்துக்கான புரமோஷனாக மாற்றியிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

பிரதீப் ரங்கநாதன் மார்க்: இயக்குநரும் ஹீரோவுமான பிரதீப் ரங்கநாதன் கல்லூரியில் பி டெக் படிக்கும் போது கெமிஸ்ட்ரி தேர்வில் 50க்கு வெறும் 11.5 மார்க் மட்டுமே எடுத்த தேர்வு தாள் போட்டோவை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இந்த வாரம் வெளியாக காத்திருக்கும் தனது அடுத்த படமான டிராகன் படத்துக்கு பக்காவான புரமோஷன் மெட்டீரியலாக அதை மாற்றியுள்ளார்.

கதையடிக்காதன்னு சொன்ன டீச்சர்: கெமிஸ்ட்ரி தேர்வில் கண்டபடி கதையடித்து வைத்த பிரதீப் ரங்கநாதன் முத்து முத்தாக அழகாக எழுதியிருந்தாலும் பதிலை படித்துப் பார்த்து அவர் கதையடித்திருப்பதை அழகாக குறிப்பிட்டு மார்க்கை குறைத்து எச்சரித்துள்ளார். அதை ஷேர் செய்த பிரதீப் ரங்கநாதன் டீச்சர் என்னை கதையடிக்க வேண்டாம் என்றார். ஆனால், அதையே நான் இப்போ வேலையாக மாற்றிவிட்டேன் என பதிவிட்டுள்ளார்.

முட்டாள் கூட்டத்த உருவாக்காதே: "நீ படிக்கல படம் எடுக்க வந்துட்ட... ஒழுங்கா படிக்குறவன ஏண்டா தப்பா influence பண்ணுற" என்றும் "முட்டாள் கூட்டத்த உருவாக்காத ப்ரோ நீயும்" என பிரதீப் ரங்கநாதனை நெட்டிசன்கள் மறுபடியும் வச்சு செய்து வருகின்றனர். டிராகன் திரைப்படம் வசூல் வேட்டை நடத்துமா? அல்லது போட்ட பட்ஜெட்டை விட சுமாரான வசூலை அள்ளுமா என்பதை வெயிட் பண்ணி பார்க்கலாம் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X