பிரகாஷ் ராஜால் தடைபட்ட விருமன் படப்பிடிப்பு… கடுப்பான தயாரிப்பாளர் !

சென்னை : நடிகர் பிரகாஜ் ராஜ் விருமன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் படப்பிடிப்பு தடைபட்டதாக கூறப்படுகிறது.

பிரகாஷ் ராஜ் கேஜிஎஃப் 2 , புஷ்பா, சர்க்கார் பாரிபடா என்ற தெலுங்கு திரைப்படத்திலும், 2 மலையாள திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

ஏராளமான படங்களை கையில் வைத்து இருப்பதாகல் இவரால், சரியாக படப்பிடிப்பில் கலந்து கொள்ளமுடியவில்லை என்று கூறப்படுகிறது. ஒரு முன்னணி நடிகரின் இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ்

ஹாய் செல்லம் இந்த வார்த்தையை கேட்டாலே நம்ம கண் முன்னடி வந்து நிற்கும் முதல் உருவம் நடிகர் பிரகாஷ் ராஜின் முகமாகத்தான் இருக்கும். பெங்களூருவைச் சேர்ந்த பிரகாஷ் ராஜ், இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் இயக்கிய டூயட் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பல மொழிகளில்

பல மொழிகளில்

பின்னர் தெலுங்கு, இந்தி, கன்னடம், என பல மொழி படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லன் நடிகராகவும் நடித்து அசத்தி வருகிறார். நடிகர் பிரகாஷ் ராஜ் பல்வேறு, கஷ்டங்களை கடந்து தான் தன்னை ஒரு நிலையான நடிகராக நிலைநிறுத்திக்கொண்டார்.

பொன்னியின் செல்வன் படத்தில்

பொன்னியின் செல்வன் படத்தில்

ஏராளமான திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வரும் பிரகாஷ் ராஜ், மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சுந்தர சோழன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் பிரகாஷ் ராஜூக்கு தோள் பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கையில் போட்ட கட்டோடு பொன்னியில் செல்வன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இப்படத்தில் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது.

விருமன்

விருமன்

கொம்பன் படத்திற்கு பின்னர் இயக்குனர் முத்தையா மற்றும் நடிகர் கார்த்தி கூட்டணி இரண்டாவது முறையாக இணையும் படம் தான் விருமன். இப்படம் மூலம் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நாயகியாக அறிமுகமாகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு, எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

Recommended Video

வீட்ல நான் செல்லப்பிள்ளை | Youtuber Priya Beyonce Exclusive | Filmibeat Tamil
படப்பிடிப்பு வரவில்லை

படப்பிடிப்பு வரவில்லை

இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கி உள்ள நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் கொடுத்த கால்ஷீட்டின்படி படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தேனியில் படக்குழுவினர் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடித்த முடியாத சூழல் ஏற்பட்டு படக்குழுவினர் சென்னை திரும்பிவிட்டனர். இதனால் தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜ் மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

அவருக்கு பதிலாக

அவருக்கு பதிலாக

இதேபோல் இயக்குனர் ஹரி இயக்கி வரும் யானை படத்திலும் அருண் விஜய்யின் அண்ணனாக பிரகாஷ்ராஜ் நடிப்பதாக இருந்தது. ஆனால் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் தாமதமாக்கியதால், பிரகாஷ்ராஜை மாற்றி விட்டு அவருக்கு பதிலாக சமுத்திரகனியை நடிக்க வைத்துள்ளார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X