தனுஷ் இயக்கப்போகும் நான்காவது படத்தில் நடிப்பது இவர்களா?.. செமயா இருக்குமே

சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. முக்கியமாக போட்டிக்கு களமிறங்கிய அயலானைவிட கேப்டன் மில்லர் வசூலில் கொஞ்சம் டல்லடித்ததாகவே கூறப்பட்டது. சூழல் இப்படி இருக்க தனுஷ் இப்போது ராயன் படத்தை இயக்கி நடித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் அந்தப் படமானது ஜூலை 26ஆம் தேதி வெளியாகிறது. இந்தச் சூழலில் தனுஷ் நான்காவது முறையாக படம் இயக்கவிருக்கிறார்.

கோலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவரான தனுஷ் கடைசியாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்தார். அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்த அந்தப் படம் பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. எனவே கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கும் தனுஷ்; தனது 50ஆவது படத்தை தானே இயக்கி நடிக்கிறார். படத்துக்கு ராயன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

Raayan Dhanush Prakash Raj

நட்சத்திர கூட்டம்: இப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். தனுஷுடன் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா, துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன் என ஏகப்பட்ட பேர் களமிறங்கியிருக்கிறார்கள். பெரும் ஸ்டார் காஸ்ட் என்பதால் இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இப்போதே எழுந்திருக்கிறது. இந்த மாதம் 26ஆம் தேதி படமானது திரையரங்குகளில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் தனுஷ்: அதேபோல் தனுஷ் முதலில் இயக்கிய பவர்பாண்டி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. எனவே ராயன் படத்திலும் இயக்குநராக தனுஷ் தனது முத்திரையை பதிப்பார் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். தன் குடும்பத்தை அழித்தவர்களை டானாக மாறி தனுஷ் பழி வாங்குவதுதான் படத்தின் ஒன் லைன் என்று சொல்லப்படுகிறது. லைன் சாதாரணமாக இருந்தாலும் தனுஷ் எந்த மாதிரியான திரைக்கதையை அமைத்திருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: ராயன் படத்தை இயக்கி முடித்திருக்கும் அவர்; அந்தப் படத்தின் பணிகளுக்கிடையே நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார். அதில் அனிகா, தனுஷின் உறவுக்கார பையன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்தப் படமும் தனுஷின் முத்திரையை பதிக்கும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

நான்காவது முறையாக இயக்குநர்: சூழல் இப்படி இருக்க ராயன் படம் பற்றி சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா பேசியபோது, 'தனுஷ் இன்னொரு கதையையும் வைத்திருக்கிறார். நான்காவது படமாக அதை இயக்கவிருக்கிறார்' என்று கூறி சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார். இந்நிலையில் ராயன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்தது. இதில் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். அப்போது பேசிய பிரகாஷ் ராஜ், தனுஷ் அவரது நான்காவது படத்தை இயக்கவிருக்கிறார். அந்தக் கதையை என்னிடமும் சொல்லிவிட்டார். நானும், நித்யா மேனனும் நடிக்கிறோம் என்று கூறியிருக்கிறார். இதனால் தனுஷ் இன்னொரு படம் இயக்குவது உறுதியாகியிருக்கிறது. தனுஷ் - பிரகாஷ் ராஜ் - நித்யா மேனன் கூட்டணி ஏற்கனவே திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X