விஜய்யின் அரசியல் பிரவேசம்.. ஒருமையில் தாக்கிய பிரகாஷ் ராஜ்.. முத்துப்பாண்டி பிரிச்சு மேஞ்சுட்டாரு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் இரண்டு தொகுதிகளில் களம் கண்டிருக்கிறார். அவரது கட்சி வேறு யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடுகிறது. விஜயகாந்த் அளவுக்கான வாக்கு வங்கியை முதல் தேர்தலில் நிரூபிப்பாரா விஜய் என்ற கேள்வி எழுந்திருந்தது. ஆரம்பத்தில் அவருக்கான மவுசு நன்றாகவே இருந்தது. ஆனால் சங்கீதா பிரச்னை வந்த பிறகு அவரது இமேஜ் டோட்டலாகவே டேமேஜ் ஆனது. இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் விஜய்யை கடுமையாக சாடியிருக்கிறார்.

அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் விஜய் தனித்து களமிறங்கியிருக்கிறார். திமுகவின் முக்கிய தலைகள் போட்டியிடும் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவரோ பெரம்பூரிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் களத்தில் இருக்கிறார். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் தோல்வியடைந்துவிடுவோம் என்ற பயத்தில்தான் அவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ஆனால் அவர் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பரப்புரையில் அவ்வப்போது ஈடுபடுகிறார்.

Prakash Raj Slams Vijay s Political Entry Questions Cinema Model in Tamil Nadu Elections
Photo Credit:

என்ன காரணம்?: அவர் கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே அவருக்கான மைலேஜ் களத்தில் கூடிதான் இருந்தது. ஆனால் விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று சங்கீதா தாக்கல் செய்த மனுவால் அவரது இமேஜ் மொத்தமாக டேமேஜ் ஆகிவிட்டது. போதாக்குறைக்கு நடிகை திரிஷாவுடன் மேட்சிங்காக ட்ரெஸ்ஸை போட்டுக்கொண்டு வந்து ஒரு திருமணத்தில் நின்றார். இந்த விஷயங்கள், அவரது அரசியல் நிலைப்பாடு, அரசியல் செய்யும் நடைமுறை என பல விஷயங்கள் அவருக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. அதனால்தான் விஜய்க்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக கருதப்படுகிறது.

Also Read
பேட்டிக்கு போன இடத்தில் சண்டை..கேமராவை உடைத்த வாட்டர் மெலன் ஸ்டார்.. அடங்கவே மாட்டாரா?.. கதறுராரே
பேட்டிக்கு போன இடத்தில் சண்டை..கேமராவை உடைத்த வாட்டர் மெலன் ஸ்டார்.. அடங்கவே மாட்டாரா?.. கதறுராரே

வலுக்கும் எதிர்ப்பு: அதேபோல் விஜய்யின் தொண்டர்கள் பல தொகுதிகளில் வாக்கு கேட்டு செல்லும்போது மக்கள் அவர்களிடம், குடும்பத்தையே பார்க்காதவர் தமிழ்நாட்டையா பார்ப்பார் என்ற கேள்வியையும் முன்வைக்கிறார்கள். அதுமட்டுமின்றி திரிஷாவுடன் விஜய் வந்ததை வைத்தும் ஆள் ஆளாக்கு இஷ்டத்துக்கு கதைகளும் சொல்ல தொடங்கிவிட்டார்கள். அதுவும் விஜய்க்கு பேக் ஃபயர் ஆகியிருப்பது உண்மைதான். இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் பழனியில் பரப்புரையில் பேசினார்.

பிரகாஷ் ராஜ் பேச்சு: அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டுக்கு துரோகம் நடந்துகொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்திலேயே அவர்கள் இப்படி செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு எவ்வளவு பெரிய தைரியம் இருக்க வேண்டும். வாயை மூடிக்கொண்டு நிற்கிறார்கள். இந்த மாடல் நமக்கு தேவையா?.. திருப்பரங்குன்றத்தை முடித்துவிட்டு நேராக பழனி வருவார்கள். மதுரையை இன்னொரு மணிப்பூராக மாற்றப்போகிறார்கள். இவர்களுக்கு இந்துக்கள் மீது இருப்பது அன்பு இல்லை. அதில் அதிகாரம் வேண்டும். இதற்கான பதில் கொடுக்க வேண்டிய தேர்தல் இது.

சினிமா மாடல்: சினிமா மாடல் என்று ஒன்று இருக்கிறது. சினிமாவில் நீ டாக்டர் ஆகலாம் முதலமைச்சர் ஆகலாம். அரசியலில் அப்படியே முதல் ஆகிடுவியா நீ?.. யார் அரசியல் பேச வேண்டும்?.. என் அளவுக்கு அரசியல் பேசிருக்கியா ப்பா?.. நீ இத்தனை வருடங்களில் தமிழ்நாட்டுக்கோ, மொழிக்கோ, தன்மானத்துக்கோ பிரச்னை வந்தபோது நீ வந்து நின்றிருக்கிறாயா?.. உங்கள் மேல் மக்கள் வைத்திருக்கும் அன்பு உங்களுடைய திறமைக்கு.

அரசியலுக்கு இல்லை. அதை பயன்படுத்துகிறீர்கள் நீங்கள். நடிகனை ரொம்ப பிடித்தால் விசில் அடிக்கலாம். நாட்டை கொடுக்க முடியாது. அரசியல் வேறு சினிமா வேறு. சீமான் பரவாயில்லையே பத்து வருடங்களாக மக்களை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். திராவிட மாடல் வேண்டுமா அடிமை மாடல் வேண்டுமா சினிமா மாடல் வேண்டுமா என்பதை முடிவு செய்யுங்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X