»   »  புதுப் புது பிரகாஷ் ராஜ்!

புதுப் புது பிரகாஷ் ராஜ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமா நலம் விரும்பியான பிரகாஷ் ராஜ், புதுப் புதுக் கலைஞர்களை அறிமுகப்படுத்துவதில், தணியாத தாகம்கொண்டவர். அடுத்ததாக புது இயக்குநர்களைப் போட்டு 3 படங்களை தயாரிக்கப் போகிறார்.

நல்ல படங்களில் நடிப்பதிலும், எடுப்பதிலும் ஆர்வம் கொண்டவர் பிரகாஷ் ராஜ். கர்நாடகத்தைச் சேர்ந்தவர்என்றாலும் தெலுங்கிலும், தமிழிலும் தான் சம்பாதிப்பதை அப்படியே கோலிவுட்டில் இன்வஸ்ட் செய்யும்ஆர்வம் கொண்டவர்.

தெலுங்கில் இவர் தான் மிக பிஸியான வில்லன். படத்துக்கு ரூ. 1 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அதைசொந்த ஊரில் கொண்டு போய் முடக்கிவிட்டு நிம்மதியாக வாழாமல், தமிழ் சினிமாவில் அதை முதலீடுசெய்து, புதியவர்களை, திறமையாளர்களை ஊக்குவிக்கும் மிக வித்தியாசமான மனிதர். இதனால் அவருக்குபெரிய அளவில் லாபம் ஏதுமில்லை. சில படங்கள் கையையும் கடித்துள்ளன.

ஆனாலும் நல்ல படம் தயாரிக்க வேண்டும் என்ற வெறி அடங்காத மனிதர். இவரது பேச்சும், சிந்தனைகளும்கூட மிக வித்தியாசமானவை. தன் தவறுகளை நேர்மையாக ஒப்புக் கொள்ளும் தைரியசாலி. நாடகத்தில் இருந்துவந்தவர் என்பதால் நடிப்பும் இவருக்கு தண்ணி பட்டபாடு தான். டூயட் படம் முதல் இப்போது வரை அவர்நடித்த ஒரு படத்திலும், அவரது கேரக்டர் சோடை போனதில்லை.

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற பொம்மரிலு படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைவாங்கியுள்ளார் பிரகாஷ் ராஜ். இப்படத்தை தமிழில், தயாரித்து இயக்கவும் உத்தேசித்திருந்தார்.

இப்போது இதில் சின்ன மாற்றமாம். அதாவது இயக்கப் போவதில்லையாம். இந்தப் படத்திற்கு முன்புஇன்னொரு படத்தைத் தயாரிக்கிறார்.

வசனகர்த்தா விஜியை இயக்குநராகப் போட்டு கள்ளபார்ட் என்ற படம் தான் அது. இதில் மலையாளத்துபிருத்விராஜ்தான் நாயகன். ஏற்கனவே பிரகாஷ் ராஜின் மொழி படத்திலும் தலை காட்டியுள்ளார் பிருத்வி ராஜ்.

அதில் பிருத்விராஜின் நடிப்பைப் பார்த்து வியந்த பிரகாஷ் ராஜ் அவரை வைத்து அடுத்த படத்தையும்தயாரிக்கிறார். இதில் முதலில் திரிஷாதான் ஜோடியாக நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷீட் குழப்பம்காரணமாக இப்போது திரிஷாவை விட்டு விட்டு ஆசினை அணுகியுள்ளாராம் பிரகாஷ் ராஜ்.

இதையடுத்து மஞ்சுள் குடை என்று ஒரு படம் தயாரிக்கப் போகிறார். இப்படத்தை பாரதிராஜாவின் உதவியாளர்மங்களேஷ் இயக்குகிறார். இதைத் தொடர்ந்து பிரகாஷ் தயாரிக்கும் இன்னொரு படத்தை கண்டநாள் முதல்இயக்குநர் பிரியாவின் உதவியாளர் நந்தினி இயக்கவுள்ளார்.

அடுத்து இயக்குநர் சரணின் தம்பியும், ஒளிப்பதிவாளருமான கே.வி.குகனை வைத்து ஒரு படத்தைஎடுக்கவுள்ளார்.

புது இயக்குநர்களை போட்டு படம் எடுப்பதில் இப்படி தீவிரமாக இருக்கிறீர்களே எப்படி என்று பிரகாஷ்ராஜிடம் கேட்டால், அவருக்கே உரிய புன்னகையை சிந்தியபடி, புதுசு புதுசா கற்பனை கிடைக்கும், புதியசிந்தனை கிடைக்கும், நல்ல கதை கிடைக்கும், ரசிகர்களுக்கு நல்ல படம் பார்த்த திருப்தி கிடைக்கும்,அதனால்தான் புதுக் கலைஞர்களை அறிமுகப்படுத்துவதில் ரொம்ப ஆர்வம் காட்டுகிறேன் என்கிறார்.

இது ரொம்பப் புதுசா இருக்கே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil