twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரூ 1 லட்சத்துக்கு கொடி வாங்கிய பிரகாஷ் ராஜ் திருப்பூரைச் சேர்ந்த "வளம் என்ற அமைப்புக்கு நிதியுதவி செய்யும் வகையில் அந்த அமைப்பிடமிருந்து ரூ. 1லட்சம் மதிப்புள்ள10,000 தேசியக் கொடிகளை நடிகர் பிரகாஷ் ராஜ் வாங்கியுள்ளார். திருப்பூரைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு வளம். இந்த அமைப்பு நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ. 1 கோடி செலவில் புதியபாலம், திருப்பூர் அரசு மருத்துவமனையில் ரூ. 30 லட்சம் செலவில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பிணவறை ஆகியவற்றைகட்டி வருகிறது. இதற்காக திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள், முக்கியப் பிரமுகர்கள் இதுவரை ரூ. 50 லட்சம் வரை நன்கொடையாககொடுத்துள்ளனர். தற்போது பொதுமக்களிடமிருந்தும் நிதி வசூல் செய்து வருகிறது வளம் அமைப்பு. இந் நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடிகளை விற்க வளம் அமைப்பு முடிவு செய்தது. அதன் மூலம்கிடைக்கும் நிதியை வைத்து தனது பணிகளை முடிக்க அது தீர்மானித்திருந்தது. இதுகுறித்து அறிந்த நடிகர் பிரகாஷ் ராஜ் வளம் அமைப்பின் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டார். தான் ரூ. 1லட்சம்அனுப்புவதாகவும், தனது அலுவலகத்திற்கு 10,000 தேசியக் கொடிகளை அனுப்பி வைக்குமாறும் அவர் கோரியுள்ளார். இந்தக் கொடிகளை சுதந்திர தினத்தையொட்டி பொது மக்களுக்கு அவர் இலவசமாக வழங்குகிறார்.

    By Staff
    |

    திருப்பூரைச் சேர்ந்த "வளம் என்ற அமைப்புக்கு நிதியுதவி செய்யும் வகையில் அந்த அமைப்பிடமிருந்து ரூ. 1லட்சம் மதிப்புள்ள10,000 தேசியக் கொடிகளை நடிகர் பிரகாஷ் ராஜ் வாங்கியுள்ளார்.


    திருப்பூரைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு வளம். இந்த அமைப்பு நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ. 1 கோடி செலவில் புதியபாலம், திருப்பூர் அரசு மருத்துவமனையில் ரூ. 30 லட்சம் செலவில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பிணவறை ஆகியவற்றைகட்டி வருகிறது.

    இதற்காக திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள், முக்கியப் பிரமுகர்கள் இதுவரை ரூ. 50 லட்சம் வரை நன்கொடையாககொடுத்துள்ளனர். தற்போது பொதுமக்களிடமிருந்தும் நிதி வசூல் செய்து வருகிறது வளம் அமைப்பு.

    இந் நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடிகளை விற்க வளம் அமைப்பு முடிவு செய்தது. அதன் மூலம்கிடைக்கும் நிதியை வைத்து தனது பணிகளை முடிக்க அது தீர்மானித்திருந்தது.

    இதுகுறித்து அறிந்த நடிகர் பிரகாஷ் ராஜ் வளம் அமைப்பின் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டார். தான் ரூ. 1லட்சம்அனுப்புவதாகவும், தனது அலுவலகத்திற்கு 10,000 தேசியக் கொடிகளை அனுப்பி வைக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

    இந்தக் கொடிகளை சுதந்திர தினத்தையொட்டி பொது மக்களுக்கு அவர் இலவசமாக வழங்குகிறார்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X