ஹீரோ .. ஹீரோ ..
அப்பு படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், அலியாக நடிக்கிறார் என்பது பழைய செய்தி.
அதற்காக மூக்குத்தி, தோடு எல்லாம் போட்டு பல மணி நேரம் மேக்கப் போட்டு கஷ்டப்பட்டு நடித்தேன் என்று அவர் அப்பு பட கேசட் விழாவில்பேசினார்.
இந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று பல அமைப்புகள் கவிதாலயாவுக்கு கண்டனக்குரல் எழுப்பியுள்ளன.
ஏற்கனவே எங்களுக்கு சமூகத்தால் மரியாதை கிடையாது எங்களை கேவலப்படுத்தும்படியாக இப்படி ஒரு வில்லன் கதாபாத்திரம் உருவாக்கிய இந்தப்படத்தை தடை செய்யாமல் விடமாட்டோம் என்று பல்வேறு அலிகள் சங்கங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
Comments


Click it and Unblock the Notifications