Don't Miss!
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- News
முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடல் நலம் பாதிப்பு..ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
இந்து மதத்தை கொச்சைப்படுத்த கிளம்பியிருப்பது நித்யானந்தா கூட்டமே: பிரசன்னா கோபம்
Recommended Video

சென்னை: உண்மையில் இந்து மதத்தை கொச்சைப்படுத்த அசிங்கப்படுத்த கிளம்பியிருப்பது நித்யானந்தா கூட்டம் தான் என்று நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.
நடிகர் பிரசன்னா பட வேலைகளில் பிசியாக இருந்தாலும் ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளார். படங்கள் குறித்து மட்டும் அல்லாமல் நாட்டு நடப்புகள் குறித்தும் ட்வீட்டி வருகிறார்.
இந்நிலையில் அவர் நித்யானந்தா பற்றி ட்வீட்டியுள்ளார்.
|
சுடர்க்கொடியே
உண்மையில் இந்து மதத்தை கொச்சைப்படுத்த அசிங்கப்படுத்த கிளம்பியிருப்பது நித்யானந்தா கூட்டம்தான். அழித்தொழிக்கப்படவேண்டிய இந்து எதிரி இக்கூட்டமே! சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே இவ்வர்ப்ப பதர்களை சுட்டெரித்துவிடு என்று கொந்தளித்துள்ளார் பிரசன்னா.

கமெண்ட்
அண்ணன் வைரமுத்து பத்தி வாய் திறக்க மாட்டேள்...ஆனா நித்யானந்தா பத்தி பேசுவெள்.. நீயெல்லாம் இந்து.. பயந்து நடுங்காதே எதிர்த்து உயிர் விடு!! இல்லேனா மூடிட்டு இரு.. உனக்கு அந்த பெண்கள் எவ்வளவோ மேல்..என்று ஒருவர் பிரசன்னாவின் ட்வீட்டை பார்த்து கமெண்ட் போட்டுள்ளார்.

ஆண்டாள்
நம் இந்துமதம் ஒருபோதும் தரம் தாழ பழக்கவில்லையே அன்பரே. மனதார சொல்லுங்கள் உங்களுக்கு அவர்கள் செயல் சரியென படுகிறதா? சிறுவயதில் உபன்யாசங்கள் மார்கழி மாதம் அதிகாலை பஜனை என்று பக்தி பழகிய எனக்கு ஆண்டாளின் பெருமை யாரோ சொல்ல வேண்டியதில்லை என்றார் பிரசன்னா.

ஸ்வாமி
வைரமுத்துக்கு நித்யானந்தா என்று இன்னொரு பெயர் உண்டா !இருக்கலாம்!தாயாரை இழிவுபடுத்தி ஆனந்தமாய் இருக்கிறார் என்று ஒருவர் கூறியதை பார்த்த பிரசன்னா, ஒரு சாதாரண மனிதனின் வார்த்தைகளைக்காட்டிலும் ஆண்டாளின் பெருமை மிகப்பெரியதன்றோ ஸ்வாமி? தெய்வத்திற்கு பழியுண்டோ? என்று கேட்டுள்ளார்.