மனசே உடைஞ்சு போச்சு.. வாய்ப்பு கேட்ட போது பட்ட அவமானம்.. கலங்கிப்போன பிரசன்னா!

சென்னை: தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும், துணை நடிகராகவும் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் பிரசன்னா. இவர் அண்மையில் வெளியாகி சக்கைப்போடு போட்ட, அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் திரிஷாவிற்கு அண்ணனாக நடித்திருந்தார். அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் இயக்குநர் ஒருவரிடம் வாய்ப்பு கேட்டு, பட்ட அவமானத்தை வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.

நடிகர் பிரசன்னா பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து ரகசியமாய், காதல் டாட் காம், அழகிய தீயே, கஸ்தூரி மான், கண்ட நாள் முதல், சீனா தானா 001, என அடுத்தடுத்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார். அதன் பின், மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் பெற்ற பெற்றதால், நாணயம், முரண் என அடுத்தடுத்த படத்தில் நெக்டிவ் ரோலில் நடித்து வந்தார்.

Prasanna sneha interview
Photo Credit:

காதல் திருமணம்: நடிகை சினேகாவுடன் 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் இணைந்து நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பெற்றோர் சம்மதத்துடன் 2012 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு விஹான் என்கிற மகனும், ஆதியாந்தா என்கிற மகளும் உள்ளனர். சினேகா கடைசியாக கோட் திரைப்படத்தில் விஜய்க்கு மனைவியாக நடித்திருந்தார். அதன் பின் எந்த படத்திலும் அவர் கமிட்டாகாததால், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார்.

படங்கள் இல்லை: அதே போல, நடிகர் பிரசன்னாவிற்கும் பெரிய அளவில் கையில் எந்த படங்களும் இல்லை, அவர் கடைசியாக அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். தற்போது, யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த பிரசன்னா, இயக்குநர் ஒருவரிடம் வாய்ப்பு கேட்டு அவமானப்பட்டதை மனம் வருத்தி கூறியுள்ளார். 2015 ஆம் ஆண்டில் இரண்டு, மூன்று வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநரை சந்தித்து வாய்ப்பு கேட்டேன். அவரை, எனக்கு ஹிட் படங்கள் கொடுப்பதற்கு முன்பிருந்தே நன்றாக தெரியும். அவரிடம் நான் கம்பேக் கொடுக்கணும் சார், நீங்கள் எடுக்கும் அடுத்த படத்தில், எனக்கு கம்பேக் கொடுக்கும் ஒரு நல்ல ரோல் இருந்தா சொல்லுங்க என்று வாய்ப்பு கேட்டேன்.

பட்ட அவமானம்: ஆனால், அந்த இயக்குநர், எதுவும் சொல்லாமல் ரொம்ப நேரமாக என்னை பார்த்துக் கொண்டே இருந்தார். பின் திடீரென, எப்போ முதல் படம் பண்ணீங்க என்று கேட்டார். நான் 2002 ஆம் ஆண்டு என்று சொன்னேன். உடனே அவர் 'டூ லேட்' என்று சொன்னார் அவருடைய முதல் படத்தோட ஹீரோவே விக்ரம் சார் தான். விக்ரம் சாருக்கு அந்த வயசு ஒன்னும் லேட் இல்லையே. அந்த மேஜிக் விக்ரம் சாருக்கு நடந்தது என்றால் எனக்கு ஏன் நடக்காது. அப்போதிலிருந்து யார் கிட்டயும் போய் வாய்ப்பு கேட்கக்கூடாது என்று முடிவு எடுத்தேன் என நடிகர் பிரசன்னா மனம் வருத்தப்பட்டு அந்த பேட்டியில் பேசி உள்ளார். நடிகர் பிரசன்னா, அந்த இயக்குநர் யார் என்று சொல்லவில்லை என்றாலும், இணையத்தில் பரலும் அந்த இயக்குநர் இவரா இருக்குமா... அவராக இருக்குமா என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X