லுங்கி கட்டி நடிக்க ஆசை... பிரசன்னா
அறிமுகப்படத்தில் எஞ்ஜினியரிங் படித்த ஸ்டூடன்ட் ஆக நடித்த பிரசன்னா தொடர்ந்து அவருக்கு ஐ.டி, எஞ்சினியர், டாக்டர் மாதிரியான கதாபாத்திரங்களே கிடைக்கிறதாம்.
இதனால் மிகவும் கவலைப்படுகிறார் பிரசன்னா. காரணம் இல்லாமல் இல்லை. லுங்கி கட்டி மதுரைக் காரராக, கிராமத்து கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறாராம் பிரசன்னா. ஆனால் இதுவரை அந்த ஆசை நிறைவேறவில்லையாம்.
இனி புதிய இயக்குநர்கள் யாராவது இதை கருத்தில் கொண்டு பிரசன்னாவிற்கு அந்த வாய்ப்பு கொடுப்பார்களா என்று பார்க்கலாம்.

இரண்டு ஹீரோவில்
தற்போது புலிவால் என்ற படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவாராக பிரசன்னா நடிக்கிறார். மற்றொரு ஹீரோ விமல்.

ஐ.டி ஸ்டூடன்ட்
இந்த படத்தில் ஐ.டி படித்த மாணவராம் பிரசன்னா. போல்டான கதாபாத்திரம்.

அப்பாவி விமல்
மற்றொரு ஹீரோவான விமல் அப்பாவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

அனன்யா, இனியா, ஓவியா
இந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் மூவருமே கேரளத்து நாயகிகள் அனன்யா, இனியா, ஓவியா.

போல்டான கேரக்டர்
இதில் ஓவியாவிற்கு போல்டான கதாபாத்திரமாம். நிஜத்தில் அப்பாவி... பயந்த சுபாவம், ஆனால் இந்த படத்தில் போல்டாக வித்தியாசமாக நடிக்கிறாராம் ஓவியா.

ராதிகா தயாரிப்பு
சென்னையில் ஒரு நாள் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து ராதிகா சரத்குமார் - தயாரிப்பாளர் லிஸ்டின் இணைந்து தயாரிக்கும் புதிய படம் புலிவால். மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற சப்பா குரிசு படத்தைத்தான் புலிவால் என ரீமேக் செய்கின்றனர்.


Click it and Unblock the Notifications











