»   »  குழந்தையை காட்டுங்க.. பிரஷாந்த் உருக்கம்

குழந்தையை காட்டுங்க.. பிரஷாந்த் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

எனது குழந்தையைப் பார்க்க என்னை அனுமதிக்க வேண்டும் என நடிகர் பிரஷாந்த் அழாத குறையாககூறியுள்ளார்.

நடிகர் பிரஷாந்த்துக்கும், சென்னையைச் சேர்ந்த கிரகலட்சுமி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதிருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் பிரஷாந்த்துக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்காக தாய்வீட்டுக்குப் போன கிரகலட்சுமி அதன் பின்னர் பிரஷாந்த்திடம் திரும்ப வரவில்லை.

இந்த நிலையில் தனது மனைவி மீது பல்வேறு புகார்களை அடுக்கி, அவரை என்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிடவேண்டும் என்று கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பிரஷாந்த் வழக்கு தாக்கல் செய்தபோதுதிரையுலகினர் மத்தியிலும், திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள் இருவரையும் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர். அதன்படி கடந்த வாரம்பிரஷாந்த்தும், கிரகலட்சுமியும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இருவரது வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்விசாரணையை ஜனவரி 1ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில் பிரஷாந்த் தனது வழக்கறிஞருடன் குடும்ப நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது அவரைசூழ்ந்த நிருபர்கள் வந்ததன் நோக்கம் குறித்து கேட்டபோது, எனக்கு எனது குழந்தையைப் பார்க்க வேண்டும் எனஏக்கமாக உள்ளது. பொது இடத்தில் வாரம் இருமுறை குழந்தையைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என கோரிமனு தாக்கல் செய்யவே வந்துள்ளதாக தெரிவித்தார்.

அப்போது அங்கு கிரகலட்சுமியின் வழக்கறிஞர்கள் வந்தனர். அவர்களும், பிரஷாந்த் மற்றும் அவரதுவழக்கறிஞரும் தனியாக ஆலோசனை நடத்தினர். கிரகலட்சுமியிடம் இதுகுறித்துப் பேசுவதாகவும், அவரிடம்பேசி விட்டு சொல்கிறோம். அதுவரை மனு தாக்கல் செய்ய வேண்டாம் என பிரஷாந்த்திடம் கிரகலட்சுமியின்வக்கீல்கள் கூறினர்.

இதையடுத்து பிரஷாந்த் மனுதாக்கல் செய்யும் முடிவை கைவிட்டு விட்டு திரும்பிச் சென்றார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil