»   »  பிரசாந்த் குடும்பம் மீது கிரகலட்சுமி புகார்

பிரசாந்த் குடும்பம் மீது கிரகலட்சுமி புகார்

Subscribe to Oneindia Tamil

பிரசாந்துடன் சமரசமாக செல்ல தயாராக இருப்பதாக அவரது மனைவி கிரகலட்சுமிதெரிவித்துள்ளார்.

நடிகர் பிரஷாந்த்துக்கும், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் கிரகலட்சுமிக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், பிரசவத்திற்காக தாய் வீட்டுக்குப் போனகிரகலட்சுமி அதன் பின்னர் பிரஷாந்த்திடம் திரும்ப வரவில்லை.

மேலும் மகனையும் பிரசாந்திடம் காட்டவில்லை. இந் நிலையில் தனது மனைவி மீது பல்வேறு புகார்களைஅடுக்கி, அவரை என்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை குடும்ப நலநீதிமன்றத்தில் பிரஷாந்த் வழக்கு தாக்கல் செய்தார்.

இதையடுத்து இருவரையும் அழைத்து விசாரித்த நீதிபதிகள் இருவருக்கும் அறிவுரை கூறினார்.

ஆனாலும் குழந்தையைப் பார்க்க பிரசாந்தை கிரகலட்சுமி தரப்பு அனுமதிக்கவில்லை. இதையடுத்து மீண்டும்நீதிமன்றத்தை நாட வந்தார் பிரசாந்த். ஆனால் அப்போது கிரகலட்சுமியின் வழக்கறிஞர்கள் பிரஷாந்த்தைநீதிமன்றத்தில் சந்தித்து குழந்தையை பார்க்க ஏற்பாடு செய்கிறோம், அதுவரை மீண்டும் நீதிமன்றத்தை நாடவேண்டாம் என பிரஷாந்த்திடம் கேட்டுக் கொண்டனர்.

இருப்பினும் குழந்தையை காட்ட கிரகலட்சுமி மறுக்கவே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் பிரசாந்த்.

இந் நிலையில் நேற்று காலை மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் வீட்டில் சமாதானப்பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தது. தனது குழந்தையோடு கிரகலட்சுமிகாலையிலேயே வந்துவிட்டார்.

ஆனால், பிரசாந்த் வரவில்லை. நீண்ட நேர காத்திருப்புக்குப் பின் வெளியே வந்தகிரகலட்சுமி நிருபர்களிடம் பேசுகையில்,

கடந்த பிப்ரவரி மாதம் என்னை பிரசாந்த் குடும்பத்தினர் வீட்டை விட்டுஅனுப்பிவிட்டனர். ஜூலை மாதம் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகுகுழந்தையை பார்க்க பிரசாந்தும், அவரது குடும்பத்தினரும் வரவில்லை.

ஆனால், என் மீது தவறான தகவல்கள் பரப்பி விடுகின்றனர். குடும்ப நல கோர்ட்டில்பிரசாந்த் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு நிலுவையில் இருப்பதால் என்னால்எதுவும் சொல்ல முடியாது. கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்வேன். நான் சமரசமாகசெல்ல தயாராகவே இருக்கிறேன் என்றார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil