»   »  மாதம் 1 லட்சம் கோரும் பிரசாந்த் மனைவி

மாதம் 1 லட்சம் கோரும் பிரசாந்த் மனைவி

Subscribe to Oneindia Tamil

மாதந்தோறும் ரூ. 1 லட்சம் ஜீவனன்சம் தர என் கணவருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை குடும்ப நலநீதிமன்றத்தில் நடிகர் பிரசாந்த்தின் மனைவி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பிராசந்துக்கும் சென்னையை சேர்ந்த கிரகலட்சுமிக்கும் 200 செப்டம்பரில் திருமணம் நடந்தது. திருமணமான 5வது மாதத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கிரகலட்சுமி தன் பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

அப்போது கிரகலட்சுமி கருவுற்றிருந்தார். 4 மாதங்களுக்கு முன் ஆண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில்சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில், நடிகர் பிரசாந்த் தாக்கல் செய்த மனுவில், என் மனைவியை என்னிடம்இருந்து பிரிக்க சிலர் முயற்சிக்கின்றனர். இந்த குடும்ப சட்டப்படி மனைவியுடன் வாழ உரிமை உள்ளது.

என்னுடன் சேர்ந்து வாழ என் மனைவிக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். மனுவை விசாரித்தநீதிபதி, பதில் மனு தாக்ககல் செய்ய கிரகலட்சுமிக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையே பிரசாந்த்க்கும், கிரகலட்சுமிக்கும் இடையே சமாதானம் செய்து வைக்க 2 முறை முயற்சி நடந்தது.இந்த முயற்சி தேல்வியில் முடந்தது. இதையடுத்து மகனைப் பார்க்க அனுமதிக்க கோரி பிரசாந்த மீண்டும் மனுதாக்கல் செய்தார்.

இந்நிலையில் ஜீவனாம்சம் கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில், கிரகலட்சுமி மனு தாக்கல் செய்துள்ளார். அந்தமனுவில் கூறியிருப்பதாவது,

திருமணத்தின் போது வரதட்சணையாக சொத்தில் பங்கு, நகைகள், எல்சிடி டிவிஉள்ளிட்ட பொருட்களை என்பேற்றோர் கொடுத்தனர். எனினும் பிரசாந்த் தரப்பில் அடிக்கடி வரதட்சணை கேட்டனர்.

இந்நிலையில் நான் கருவுற்றேன். மருத்துவ ரீதியாக கருத்தரிப்பில் சிக்கல் இருந்ததால், முழு ஓய்வில் இருக்குவேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். நான் ஓய்வு எடுப்பதை என் மாமாவும், மாமியாரும், பிராசந்தின்சகோதிரியும் விரும்பவில்லை. என் பெற்றோர் வீட்டுக்குச் செல்லுமாறு அவர்கள் கூறினார்.

இடையே அவர்கள் பேசும்போது கூட வரதட்சணை பற்றியே பேசினர். மருத்துவத்துக்கு ரூ. 2 லட்சம் வரைசெலவு செய்துவிட்டோம். குழந்தை பிறந்தபோது கூட பிரசாந்த மற்றும் அவரது வீட்டில் இருந்து யாரும்வரவில்லை.

எங்களை நிராதரவாய் தவிக்கவிட்டு, வழக்கும் தொடர்ந்துள்ளார். எனக்கு வருமானத்துக்கு வழி இல்லை. என்பெற்றோரை நம்பியே வாழ்கிறேன். எனவே எனக்கும், என் மகனுக்கும் மாதந்தோறும் ரூ. 1 லட்சம்ஜீவனாம்சமாக வழங்க பிரசாந்துக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இதனால் பிரசாந்த் குடும்ப சிக்கல் மேலும் பெரிதாகியுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil