ஹீரோ .. ஹீரோ ..

By Staff

காதல் ஜோடி ஒன்றிற்கு பிரியாத வரம் தந்திருக்கிறார் நடிகர் பிரசாந்த்.

திருச்சியை சேர்ந்த காதலர்கள் இருவர் சிறுவயதிலிருந்தே நட்புடன் பழகி வந்துள்ளனர். அது காதலாக மாறினாலும், காதலைச் சொன்னால் இருக்கிறநட்பும் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருவருமே தங்கள் காதலை வெளிப்படுத்தாமல் இருந்து வந்துள்ளனர். பிரியாத வரம் வேண்டும் பிரசாந்த்,ஷாலினி மாதிரி காதலை மனதில் பூட்டி வைத்துக் கொண்டு தடுமாறி வந்தனர்.

இந்த நேரத்தில் தான் வந்தது பிரியாத வரம் வேண்டும் படம். படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தவுடன் இருவரும் செய்த முதல் காரியம் தங்கள் காதலைஒருவருடன் ஒருவர் பகிர்ந்து கொண்டது தான்.

அடுத்தபடியாக சென்னைக்கு பஸ் ஏறினர் தங்கள் மனதைத் திறக்க வைத்த பிரசாந்தை சந்திக்க.

சென்னையில் ஸ்டார் படப்பிடிப்பிலிருந்த பிரசாந்தை சந்தித்து தங்களது திருமணத்தை முடித்து வைக்க கோரினர். இதை கேட்டு திகைத்த நடிகர் பிரசாந்த், உடனடியாககாதலர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு அவர்களின் கருத்தை கேட்டறிந்தார்.

இருவரின் பெற்றோரும் ஒத்துக்கொள்ளவே திருமணத்தை நடத்தி வைத்த பிரசாந்த் புதுமணத் தம்பதிகளை தனது செலவில் திருச்சி அனுப்பி வைத்தார்.

இத் திருமணத்தில் ஸ்டார் பட சூட்டிங்கிற்கு வந்திருந்த நடிகை ஜோதிகா உள்ளிட்ட திரையுலகினர் கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தினர்.

More from Filmibeat

Read more about: chennai cinema prasanth tamilnadu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X