ஹீரோ .. ஹீரோ ..
விரும்புகிறேன் வருகிற வழியைக் காணோம். அதற்குள் நடிகர் சங்கத்தின் தடை வந்து விட்டது. இந்தக் கவலைகளையெல்லாம்மூட்டை கட்டி வைத்து விட்டு புதுப் படம் ஒன்றில் புக் ஆகியுள்ளார் பிரசாந்த். படத்தின் பெயர் நீ .. நான் .. காதல்..
படத்தைத் தயாரிக்கப் போவது வெற்றிப் படங்களின் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி. ஏற்கனவே பிரசாந்த்தை வைத்து பூமகள்ஊர்வலம் என்ற படத்தைத் தயாரித்தவர்தான் செளத்ரி. முதலுக்கு மோசமில்லாமல் அதுவும் ஓடியது.
நீ.. நான்.. காதல்.. படத்தின் மூலம் இயக்குனர் சூர்யாவிடம் உதவியாளராக இருந்த ரவி மெளரியா டைரக்டர் அந்தஸ்துக்குஉயருகிறார். கதை, திரைக்கதை, வசனம் அவருடையதுதான். லொடுக்குப் பாண்டியாக வந்து நந்தாவில் அசத்திய கருணாஸுக்குஇதில் முக்கியமான வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
பாடகர் தீபன் சக்கரவர்த்தியும் நடிக்கிறார். டும் டும் டும் படத்தில் அசத்திய மலையாள நடிகர் முரளியும் படத்தில் வருகிறார்.
மணி ஷர்மாவின் இசையில் வளரவுள்ள இந்தப் படத்தை விரைவாக முடிக்க செளத்ரி திட்டமிட்டுள்ளார்.
தலைப்பு ரொம்ப புதுமையாகத் தான் இருக்கிறது. கதை எப்படியோ?
ஆனால், இந்தப் படம் வென்றால் இதே மாதிரி தலைப்புகளில் படங்களை எடுத்துத் தள்ளுவார்கள் நம்ம ஆட்கள்.
வா..போ.., இங்கே.. அங்கே.., சீ.. சூ.. என்று கூட படம் வரலாம்.


Click it and Unblock the Notifications











