ஹீரோ .. ஹீரோ ..
தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் நடிகர்பிரசாந்த்.
பிரசாந்த் நேற்று (சனிக்கிழமை, ஏப்ரல் 06, 2002) தன்னுடைய 29வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
ஆழ்வார்பேட்டையிலுள்ள தன்னுடைய வீட்டிற்கு முன்பாக உள்ள பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிட்டபிரசாந்த், பின்னர் தி. நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலுக்குச் சென்று விசேஷ பூஜைக்கு ஏற்பாடுசெய்து, சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் காளிகாம்பாள் கோவிலுக்கும் சென்று அம்பாளை வழிபட்டார். அங்குசிறப்பு பூஜை, அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்பட்டன.
அதன் பிறகு வீடு திரும்பிய பிரசாந்த், சக நடிக-நடிகைகள், திரை உலகினர் மற்றும் ரசிகர்களின் வாழ்த்துக்களையும்பரிசுப் பொருட்களையும் பெற்றுக் கொண்டார்.
பின்னர் நேற்று மாலை தன்னுடைய தந்தையும் நடிகருமான தியாகராஜன், தாய் சாந்தி மற்றும் தங்கை ப்ரீத்திஆகியோருடன் ஜெயலலிதா வீட்டுக்குச் சென்றார் பிரசாந்த்.
அங்கு சென்று ஜெயலலிதாவைச் சந்தித்த பிரசாந்த், அவரிடம் பிறந்தநாள் ஆசி பெற்றார்.
அதிமுகவில் இணைந்த நடிகர்கள்
நடிகர்கள் பாண்டியன் மற்றும் சரண்ராஜ் ஆகியோர் நேற்று அதிமுகவின் பொதுச் செயலாளருமானஜெயலலிதாவைச் சந்தித்து, அவர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
மேலும் சமீபத்தில் பாமகவிலிருந்து நீக்கப்பட்ட பிரமுகர்கள், திமுக, மதிமுக மற்றும் தமாகா தொண்டர்கள் உள்பட14,000 பேரும் அதிமுகவில் இணைந்தனர்.


Click it and Unblock the Notifications











