ஹீரோ .. ஹீரோ ..
இப்போதைக்கு கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை என்ற தீர்மானமான முடிவில் இருக்கிறார் நடிகர்பிரசாந்த்.
விஜய, அஜீத், மாதவன் எல்லாம் கல்யாணம் செய்து கொண்டு "செட்டிலாகி" விட்டார்கள். இளைய தலைறை ஸ்டார்வரிசையில் பிரசாந்த், சூர்யா போன்றோர்தான் இன்னும் பேச்சலர் வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
சூர்யா, இன்னும் ஸ்டார் அந்தஸ்துக்கு உயரவில்லை. எனவே அவர் கல்யாணத்திற்கு இப்போதுஅவசரப்படவில்லை.
ஆனால் விஜய், அஜீத்துக்கு முன்பே ஹீரோவாக நடிக்க வந்து விட்ட பிரசாந்த் இன்னும் பேச்சிலராக இருப்பதுஅவரது பெற்றோருக்கு உறுத்தலாக இருக்கிறதாம்.
எனவேதான் கடந்த ஆண்டே பிரசாந்த்துக்கு பெண் பார்க்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார் அப்பா தியாகராஜன். பிரசாந்த்தும் பெண் பார்க்கும் படலத்திற்கு ஓ.கே. சொன்னார்.
ஆனால் திடீரென இப்போது கல்யாணம் வேண்டாம், பிறகு பார்க்கலாம் என்று கூறி விட்டாராம்.
ஏன் இந்த மாற்றம் என்று அப்பா அன்புடன் கேட்கவே, முன்னணி நாயகன் என்ற அந்தஸ்து மட்டுமே என்னிடம்உள்ளது. பெரிய அளவில் பிரேக் கொடுக்கும் விதத்தில் ஒரு படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற வெறி உள்ளது.அதை செய்துவிட்டுத் தான் திருமணம் செய்வேன். அதனால், இன்னும் ஒரு வருடத்துக்கு பெண் பார்க்க வேண்டாம்என்று விட்டாராம்.


Click it and Unblock the Notifications











