ஹீரோ .. ஹீரோ ..
"தமிழ்" பட வெற்றி பிரசாந்த்திற்கு புதுத் தெம்பு கொடுத்துள்ளது. இதையடுத்து வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்.அவையாவன:
1. இனிமேல் தமிழ் போன்ற அழுத்தம் திருத்தமான கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடிப்பது.
2. வருடத்திற்கு 3 படங்களை கண்டிப்பாகக் கொடுப்பது.
3. படத்திற்குப் படம் வித்தியாசமான கதையில் நடிப்பது.
இந்த மூன்றையும் கடைப்பிடித்தால் படம் பிய்த்துக் கொண்டு போகும் என்று அசைக்க முடியாத நம்பிக்கைகொண்டுள்ளார் பிரசாந்த்.
தன் தந்தை தியாகராஜனோடு பிரசாந்த் நடிக்கவுள்ள புதிய படம் வித்தியாசமான கதையம்சம் கொண்டதாம்.
அந்தப் படம் "தமிழ்" அளவுக்கு தனக்குப் பெயர் வாங்கித் தரும் என்று தீவிரமாக நம்புகிறாராம் பிரசாந்த்.
டெய்ல் பீஸ்: சிம்ரனோடு நடித்துள்ள அத்தனைப் படமும் வெற்றிப் படமாக அமைந்திருப்பதால் பிரசாந்த் ரொம்பகுஷியாக உள்ளாராம். தனக்கு சரியான ஜோடி (சினிமாவிலதானுங்கோவ்) சிம்ரன் தான் என்று எல்லோரிடமும்மாய்ந்து மாய்ந்து சொல்லி வருகிறாராம் அவர்.


Click it and Unblock the Notifications











