ஜானி: பிரசாந்த் சொல்லும் அடடே தகவல்

ஜானி ஒரு ட்ரெண்ட் செட் படம் என பிரசாந்த் தெரிவித்துள்ளார்

சென்னை: ஜானி திரைப்படத்தை பற்றி நடிகர் பிரசாந்த் உற்சாகமாக பேசியுள்ளார்.

அறிமுக இயக்குனர் வெற்றிச் செல்வன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்துள்ள திரைப்படம் ஜானி. இப்படத்தின் டீசரை இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டார்.

Prashanth about Johnny!

பிரசாந்த், சஞ்சிதா ஷெட்டி, ஆனந்த்ராஜ், பிரபு, சயாஜி ஷிண்டே, கலைராணி, தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜானி பட டீசரைப் பார்க்கும்போது நொடிக்கு நொடி பரபரப்பைத் தூண்டும் வகையில் உள்ள ஆக்‌ஷன் படமாக இருக்கும் எனத் தெரிகிறது.

படம் தொடர்பாக பேசிய நடிகர் பிரசாந்த், ஷாக் என்ற பேய் படம் பண்ணும்போது, பேய்ப் படங்களுக்கு அது ஒரு ட்ரெண்ட் செட்டராக இருந்தது. அதன் பிறகு நிறைய பேய் படங்கள் வர ஆரம்பித்தன. பொன்னர் சங்கர் திரைப்படம் பண்ணும்போது அப்படியொரு வரலாற்றுப் படம் பண்ண முடியுமா என கேள்வி இருந்தது. சிலர் முயற்சி செய்தார்கள் ஆனால் வெற்றி கிடைக்கவில்லை.

அந்த படத்தில் பெரிய செட் போட்டு 80 ஆயிரம் வீரர்களைக் கொண்டு இரண்டு போர்க் காட்சிகளை படமாக்கினோம். அது ஒரு ட்ரெண்ட் செட்டரானது. அதன்பிறகு பாகுபலி என வரலாற்று படங்கள் வந்தன. அதேபோல் இந்த படமும் ட்ரெண்ட் செட் செய்யும் படமாக அமையும், இப்படத்தில் எல்லோருக்குமே சமமான கதாபாத்திரம் உள்ளது. மிகச்சரியாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது எனப் பேசினார்.

மேலும், விமர்சனம் செய்பவர்கள் சொல்லும் நிறை குறைகளை மனதில் வைத்து கவனமாக எடுத்துள்ளோம். டீசர் நன்றாக இருப்பது போலவே படமும் நன்றாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

நடிகர் ராதாரவி பேசும்போது ரஜினியின் வெற்றிப்படமான ஜானியின் பெயரில் பிரசாந்த் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பிரபு வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இது நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என வாழ்த்தினார். இவ்விழாவில், தியாகராஜன், சஞ்சிதா ஷெட்டி, சாயாஜி ஷிண்டே, இயக்குனர் வெற்றிச் செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X