முதல் ஆளாக எழுந்து கடைசி ஆளாக தூங்கியவர் கருணாநிதி: பிரசாந்த் உருக்கம்
Recommended Video

முதல் ஆளாக எழுந்து கடைசி ஆளாக தூங்கியவர் கருணாநிதி: பிரசாந்த் உருக்கம்- வீடியோ
சென்னை: முதல் ஆளாக எழுந்து கடைசி ஆளாக தூங்கியவர் கருணாநிதி என்று நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி கடைசியாக திரைக்கதை எழுதிய படம் பொன்னர் சங்கர். அந்த படத்தின் ஹீரோ பிரசாந்த். கருணாநிதியின் மறைவுக்கு பிரசாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கருணாநிதியுடன் சேர்ந்து பணியாற்றியது குறித்து பிரசாந்த் கூறியதாவது,
பொன்னர் சங்கர் படத்தில் நடித்தபோது அவருடன் நான்கு ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அவர் வேலை செய்யும் விதத்தை அருகில் இருந்து பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.
அந்த வயதிலும் அவர் வேலை பார்க்கும் வேகம் எங்களை வியப்பில் ஆழ்த்தியது. அவர் தான் முதல் ஆளாக காலை 4.30 மணிக்கு எழுவார், கடைசி ஆளாக தூங்கப் போவார். அவரின் அன்பை ஒருபோதும் மறக்க மாட்டேன் என்றார்.
Comments


Click it and Unblock the Notifications