அந்தகன் ஒரு பக்கம் இருக்கட்டும்.. GOAT படத்தில் டாப் ஸ்டார் பிரசாந்த்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: டாப் ஸ்டார் பிரசாந்த் கடைசியாக அந்தகன் படத்தில் நடித்தார். பல வருடங்கள் கழித்து ஹீரோவாக அவர் களமிறங்கியிருந்ததால் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் வெளியானது. படம் பார்த்த ரசிகர்கள் தங்களது நல்ல ரெஸ்பான்ஸையே கொடுத்தார்கள். அடுத்ததாக அவரது நடிப்பில் GOAT படம் வெளியாகவிருக்கிறது. விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் அப்படத்தில் பிரசாந்த் முக்கியமான ரோலை செய்திருக்கிறார். இந்தச் சூழலில் அந்தப் படத்துக்காக பிரசாந்த் வாங்கியதாக ஒரு சம்பள தொகை குறித்த தகவல் உலா வருகிறது.

கோலிவுட்டில் பிரசாந்த் தவிர்க்க முடியாத நடிகர். அவரது தந்தை தியாகராஜன் சினிமாவில் இருந்தாலும்; முறையாக பல கலைகளை பயின்றுவிட்டுத்தான் சினிமாவுக்கு வந்தார் பிரசாந்த். அவர் நடித்த முதல் படமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதை அடுத்து ஒட்டுமொத்த கோலிவுட்டின் பார்வையும் அவர் மீதுதான் திரும்பியது. அந்த சின்ன வயதில் அவ்வளவு பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு தேர்ந்த திறமையாளன் என்பதை சட்டென உணர்த்தியவர் பிரசாந்த்.

goat vijay prashanth

டாப் ஹீரோ: முதல் பட வெற்றிக்கு பிறகு அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்துக்கொண்டே வந்தார். 90களில் விஜய், அஜித்தைவிடவும் டாப்பில் இருந்தவர் பிரசாந்த்தான். ஆக்‌ஷன், ரொமான்டிக், காமெடி என அனைத்து ஜானர் படங்களையும் கொடுத்து; அப்போது வளர்ந்துவந்த ஹீரோக்களுக்கு பெரும் முன்னுதாரணமாக திகழ்ந்தவர் என்றுதான் சினிமாவை நன்கு அறிந்தவர்கள் சொல்வார்கள்.

சில பிரச்னைகள்: பிரசாந்த்தின் கரியர் பீக்கில் சென்றுகொண்டிருந்தது. ஆனால் அந்த சமயத்தில்தான் அவருக்கு சில பிரச்னைகள் ஏற்பட்டதாகவும்; அதன் காரணமாக சினிமாவிலிருந்து அவர் ஒதுங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டதாகவும் பலர் சொல்வதுண்டு. முக்கியமாக அவரது திருமண விவகாரம்தான் பிரசாந்த்தை கொஞ்சம் அசைத்து பார்த்துவிட்டது என்றும் ஒரு தகவல் ஓடியது குறிப்பிடத்தக்கது. ஆனால் பிரசாந்த் மனம் தளராமல் தனது காலத்துக்காக காத்திருந்தார்.

அந்தகன் பிரசாந்த்: இடையே தெலுங்கு சினிமாவில் சப்போர்ட் ரோல் செய்தார். சூழல் இப்படி இருக்க அந்தாதூன் படத்தை ரீமேக் செய்து ஹீரோவாக களமிறங்க முடிவு செய்தார்.படத்தை அவரது தந்தை தியாகராஜன் இயக்கினார். பிரசாந்த்துடன் சிம்ரன், ப்ரியா ஆனந்த், சமுத்திரகனி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தார்கள்.கடந்த மாதம் வெளியான படத்துக்கு நல்ல வரவேற்பே கிடைத்தது. இதன் காரணமாக பிரசாந்த்தும், அவரது தந்தை தியாகராஜனும் ஹேப்பி மூடில் இருக்கிறார்கள்.

GOAT பிரசாந்த்: இதற்கிடையே விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் GOAT படத்தில் முக்கியமான ரோல் செய்திருக்கிறார் பிரசாந்த். அவர் படம் முழுக்க வருவார் என்பது ட்ரெய்லரை பார்க்கையில் புரிகிறது. இந்நிலையில் GOAT படத்துக்கு பிரசாந்த் வாங்கிய சம்பள தொகை என்று ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தில் நடிப்பதற்கு பிரசாந்த் ஐந்து கோடி ரூபாய்வரை சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X