twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கஜா: சத்தமே இல்லாமல் களத்தில் இறங்கி நிவாரண பொருட்களை வழங்கிய பிரசாந்த்

    By Siva
    |

    Recommended Video

    மக்கள் பணியில் நடிகர் பிரசாந்த்- வீடியோ

    நாகை: கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நடிகர் பிரசாந்த் உதவி செய்துள்ளார்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திரையுலகி பிரபலங்கள் நிவாரண நிதி அளிப்பதுடன் பொருட்களையும் அனுப்பி வைக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் பிரசாந்த், தனது தந்தை தியாகராஜனுடன் சென்று மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.

    Prashanth helps Gaja victims

    அவர் மக்களை சந்தித்து ஆறுதல் கூறி உதவியது ரசிகர் ஒருவர் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்ட பிறகே வெளியே தெரிந்தது.
    எந்த வித விளம்பரமும் இல்லாமல் அவர் மக்களுக்கு உதவி செய்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது,

    பாதிக்கப்பட்ட மக்கள் கேட்பது ஒன்று தான் உடனே வீடு வேண்டும் என்கிறார்கள். சேதம் அடைந்துள்ள வீடுகளில் உள்ள ஓட்டைகளை அடைக்க தார்பாய்கள் வேண்டும். சாப்பாடு நல்லபடியாக கிடைக்கிறது.

    நிறைய முகாம்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிக்கூடத்தை முகாமாக மாற்றி நிவாரண பொருட்களை அங்கு எடுத்துச் செல்கிறார்கள். அரசு தரப்பில் உதவிகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. மின்வாரியத் துறை துரிதமாக செயல்பட்டு வருகிறது.

    வாழ்வாதாரத்தை இழந்துவிட்டோம். எங்களின் வாழ்க்கையை மீண்டும் எப்படி துவங்குவது என்று தெரியவில்லை என்கிறார்கள் மக்கள். மீனவர் கிராமத்திற்கு சென்று பார்த்தபோது படகுகள் எல்லாம் சேதம் அடைந்திருந்தன. இதனால் கடலுக்கு செல்ல முடியாமல் உள்ளனர்.

    ஒவ்வொரு கம்பெனியும் ஒரு ஊரை தத்தெடுத்து குறைந்தது 10 படகுகளை சரி செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்கிறார் பிரசாந்த்.

    English summary
    Actor Prashanth has visited villages affected by Gaja cyclone and helped them.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X