அஜித்துக்கு ஓபனாகவே தூது விட்டிருக்கும் கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல்.. ஏகே ஒத்துக்கொள்வாரா?

சென்னை: கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித்; கடந்த வருடத்தில் இரண்டு படங்களில் நடித்தார். இரண்டுமே சுமார் ஹிட்டுகள்தான். அடுத்ததாகவும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் பேசியிருக்கும் விஷயம் ஏகே ரசிகர்களிடையே ஆவலை அதிகப்படுத்தியிருக்கிறது.

தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவர் அஜித்குமார். முன்பெல்லாம் வருடத்துக்கு ஒரு படம் மட்டுமே நடித்துவந்த அவர்; கடந்த வருடத்தில் மட்டும் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் நடித்திருந்தார். இரண்டு படங்களும் சுமார் ரகத்தில் இருந்தன. குட் பேட் அக்லியை அவரது ரசிகர்கள் மட்டுமே கொண்டாடினார்கள். ஒரே வருடத்தில் இரு படங்களில் ஏகே நடித்தது பெரிய ஆச்சரியத்தை அவரது ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. அஜித்தின் அந்த திடீர் மாறுதலுக்கு ஒரே ஒரு காரணம்தான். அது கார் ரேஸ்.

Prashanth Neel Wants Ajith Kumar for His Dream Mythological Film AK Fans Excited
Photo Credit:

கார் ரேஸில் கவனம்: தனது திரைத்துறை கரியரை ஆரம்பித்ததிலிருந்தே அவருக்கு ரேஸ் மீது எக்கச்சக்க ஆர்வம். சில பந்தயங்களில் அப்போது கலந்துகொண்டிருந்தாலும்; பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதுமட்டுமின்றி அடிக்கடி விபத்துகளை சந்தித்தார். இதனால் உடல்நிலையும் மோசமானது. கவனம் சிதறி தொடர்ச்சியாக படங்களும் தோல்வியை சந்தித்தன. எனவே ரேஸ் பற்றிய கனவை தூரமாக வைத்துவிட்டு முழுக்க முழுக்க சினிமாவில் கவனம் செலுத்தினார். தற்போது தனக்கென அசைக்க முடியாத மார்க்கெட்டை வைத்திருக்கிறார். எனவே இப்போது கார் ரேஸில் கவனத்தை செலுத்தியிருக்கிறார்.

Also Read
சிவகார்த்திகேயன் பட்ட கஷ்டம் தெரியுமா?.. ஓபனாக போட்டுடைத்த சந்தோஷ் நாராயணன்
சிவகார்த்திகேயன் பட்ட கஷ்டம் தெரியுமா?.. ஓபனாக போட்டுடைத்த சந்தோஷ் நாராயணன்

வெற்றி பெறும் அஜித்: சும்மா பெயருக்காக ரேஸில் கலந்துகொள்ளாமல்; அனைத்தையும் திட்டமிட்டு; பக்கா டீமோடு களமிறங்கி நிறைய வெற்றிகளையும் பெற்றுவருகிறார். சமீபத்தில்கூட ரேஸில் அவரது ஆர்வத்தை பாராட்டும் விதமாக மஹிந்திரா நிறுவனம் சார்பில் உலகத்தின் முதல் ஃபார்முலா ஈ தீம் எஸ்யூவி (Mahindra BE6 Formula E) கார் பரிசாக வழங்கப்பட்டது. அதன் விலை மட்டுமே 30 லட்சம் ரூபாய் ஆகும். இது அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது.

அடுத்த படம்: என்னதான் அவர் கார் ரேஸில் கலக்கினாலும்; சினிமாவில் முழு மூச்சாக இயங்க வேண்டும் என்பதுதான் அவரது ரசிகர்களின் ஆசை. அதற்கான வேலைகளில் அவர் ஈடுபட்டிருந்தாலும்; ரொம்பவே ஸ்லோவாக இருக்கிறார் என்பது ஏகே ரசிகர்களின் குற்றச்சாட்டு. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தி நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித் குறித்து பேசியிருப்பது வைரலாகியிருக்கிறது.

பிரசாந்த் நீல் பேட்டி: அவர் அந்தப் பேட்டியில், "ஒரு கலர்ஃபுல்லான புராண கதை இருக்கிறது. அதை இரண்டு இயக்குவதற்கு இரண்டு தசாப்தங்களாக முயல்கிறேன். அந்தப் படத்தில் அஜித் நடித்தால் சூப்பராக இருக்கு என்று விருப்பம். ஏனெனில் இப்போது கோலிவுட்டில் பான் இந்தியா படங்கள் அதிகம் உருவாகவில்லை. இது நடந்தால் கோலிவுட்டிலிருந்து வரும் பிரமாண்டமான பான் இந்தியா படமாக இது அமையும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X