GOAT படத்தில் நடிக்க இதுதான் காரணம்.. உண்மையை போட்டுடைத்த பிரசாந்த்
சென்னை: வெங்கட் பிரபு கோலிவுட்டில் இப்போது முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான கஸ்டடி திரைப்படம் படுதோல்வியடைந்தது. அதற்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி ஓகே வாங்கியிருந்த அவர் தற்போது GOAT படத்தை இயக்கிவருகிறார். பெரும் எதிர்பார்ப்போடு இந்தப் படம் உருவாகிவருகிறது. செப்டம்பர் மாதம் படம் ரிலீஸாகவிருக்கும் சூழலில் படத்தில் நடித்தது குறித்து பிரசாந்த் ஓபனாக பேசியிருக்கிறார்.
கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபு. சில படங்களில் நடித்த அவர் சென்னை 600028 படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். நட்பு, கிரிக்கெட் ஆகியவைகளை மையமாக வைத்து படு ஜாலியாக அந்தப் படத்தை உருவாக்கியிருந்தார் அவர். படமும் மெகா ஹிட்டானது. முக்கியமாக முதல் பட இயக்குநர் போன்றே அவர் பணியாற்றவில்லை. அனுபவம் மிக்க இயக்குநர் போல் படத்தை உருவாக்கியிருக்கிறார் என்று பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தன.

அடுத்தடுத்த ஹிட்: முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவதாக சரோஜா படத்தை இயக்கினார். அந்தப் படமும் சூப்பர் ஹிட்டானது. முக்கியமாக த்ரில்லர் ஜானரிலும் தான் கைதேர்ந்தவர் என்பதை வெங்கட் பிரபு அந்தப் படத்தின் மூலம் நிரூபித்தார். தொடர்ந்து அவர் இயக்கிய கோவா படம் தோல்வியடைந்தது. படம் வணிக ரீதியாக வரவேற்பை பெறாவிட்டாலும் படம் பார்ப்பதற்கு ஜாலியாக இருந்தது என்றும்; ரொம்பவே கேஷுவலாக படத்தை உருவாக்கியிருக்கிறார் என்றும் ரசிகர்கள் ஓபனாகவே கூறினர்.
மெகா ஹிட்: வெங்கட் பிரபுவின் கரியரிலேயே அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் மங்காத்தா. அஜித்தின் 50ஆவது படமாக உருவான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. படத்தில் அவர் வைத்திருந்த ட்விஸ்ட் அதிரிபுதிரி வரவேற்பை பெற்றது. மங்காத்தா வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் என்ற வரிசையில் இடம்பெற்றுவிட்டார். மேலும் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்துக்கான லீடோடு படத்தை முடித்திருந்தார் அவர்.
GOAT:மங்காத்தா படத்துக்கு பிறகு அவர் இயக்கிய சில படங்கள் சரியாக போகவில்லை. அந்த சறுக்கலை மாநாடு படத்தின் மூலம் சரி செய்துகொண்ட அவர் கடைசியாக கஸ்டடி படத்தை இயக்கினார். தற்போது விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோரை வைத்து GOAT படத்தை இயக்கிவருகிறார். அஜித்துக்கு எப்படி மெகா ஹிட்டை கொடுத்தாரோ அதேபோல் விஜய்க்கும் இதில் மெகா ஹிட்டை கொடுப்பார் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். செப்டம்பர் 5ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது.
ரீ என்ட்ரி டாப் ஸ்டார்: இந்தப் படத்தில் மற்றொரு ஹைலைட்டாக இருப்பது டாப் ஸ்டார் பிரசாந்த். 90களில் விஜய், அஜித்தைவிடவும் பாப்புலரில் இருந்த பிரசாந்த் சில காரணங்களால் சினிமாவிலிருந்து காணாமல் போனார். அதற்கு பிறகு இப்போது கோட் படத்தில் நடித்திருக்கிறார். முதன்முறையாக விஜய்யுடன் பிரசாந்த் நடிப்பதால் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது. முதல் சிங்கிளில் விஜய், பிரபுதேவாவுடன் இணைந்து அட்டகாசமாக நடனம் ஆடவும் செய்திருந்தார் அவர்.
பிரசாந்த் பேட்டி: இதற்கிடையே அந்தகன் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார் பிரசாந்த். அந்தப் படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் கோட் படத்தில் நடித்ததற்கான காரணம் குறித்து பேசியிருக்கிறார் பிரசாந்த். அதுகுறித்து அவர் கூறுகையில், ”இயக்குநர் வெங்கட் பிரபுவும், ராஜுசுந்தரம் மாஸ்டரும்தான் கோட் படத்தில் நான் நடிக்க காரணம். விஜய்க்கும் பிரபுதேவாவுக்கும் எனது நன்றிகள். இந்தப் படம் செய்ய காரணமே, மூன்ரு பேரும் சேர்ந்து நடனம் ஆட வேண்டும் என்று வெங்கட் பிரபு சொன்னதுதான். நாங்கள் மூவருமே என்ஜாய் செய்து நடனம் ஆடினோம். இந்தப் படத்தை ரசிகர்கள் கண்டிப்பாக என்ஜாய் செய்வார்கள்” என்றார்.


Click it and Unblock the Notifications











