ஹேப்பி நியூஸ்.. இரண்டாவது திருமணத்துக்கு ரெடியான டாப் ஸ்டார் பிரசாந்த்.. சீக்கிரம் டும் டும் டும்?

சென்னை: பிரசாந்த் பல வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக நடித்திருக்கும் படம் அந்தகன். ஹிந்தியில் வெளியாகி மெகா ஹிட்டான அந்தாதூன் படத்தின் ரீமேக்காக இது உருவாகியிருக்கிறது. இப்படத்தை இயக்குநரும், பிரசாந்த்தின் தந்தையுமான தியாகராஜன் இயக்கியிருக்கிறார். சிம்ரன், ப்ரியா ஆனந்த், கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் ஆகஸ்ட் 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

விஜய், அஜித் இப்போது ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு அடுத்த இடங்களில் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் விஜய் அல்லது அஜித் ஆகியோரின் ஒருவர் இடத்தில் இருந்திருக்க வேண்டியவர் என்றால் அவர் பிரசாந்த்தான். தியாகராஜனின் மகனான அவர் 90களில் மிக பிரபலமான ஹீரோவாக வலம் வந்தார். நடிக்க வந்த சில காலத்திலேயே மணிரத்னம், பாலுமகேந்திரா போன்ற லெஜெண்ட் இயக்குநர்கள் இயக்கிய படத்தில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

Prashanth Andhagan

சாக்லேட் பாய்: பிரசாந்த்தை பொறுத்தவரை எந்தக் கதாபாத்திரம் என்றாலும் அசால்ட்டாக செய்யக்கூடியவர். அவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் ஒன்று 90களில் இருந்தது. அந்த ரசிகர் பட்டாளத்தை தக்க வைக்கும் வகையில்தான் அவரது படங்களும் இருந்தன. வரிசையாக பல ஹிட்டுகளை கொடுத்து அதகளப்படுத்தினார். முக்கியமாக பிரசாந்த்துக்கென்று பெண் ரசிகைகள் தமிழ்நாடு முழுவதும் இருந்தார்கள். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கலக்கினார் அவர்.

பிரச்னைகளால் வந்த விலகல்: சூழல் இப்படி இருக்க அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்னைகள் நடந்தது. அதன் காரணமாக சினிமாவிலிருந்து அவரது கவனம் விலகியதை அடுத்து; அவரை சினிமா விலக்கி வைத்தது. சூழல் இப்படி இருக்க பல வருடங்கள் கழித்து ரீ என் ட்ரி கொடுத்திருக்கிறார் டாப் ஸ்டார். அந்தவகையில் அந்தாதூன் படத்தின் ரீமேக்காக உருவாகியிருக்கும் அந்தகன் படத்தில் நடித்திருக்கிறார்.

ஆகஸ்ட் 9ல் ரிலீஸ்: முதலில் இந்தப் படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் ஆறு நாட்களுக்கு முன்னதாகவே; அதாவது ஆகஸ்ட் 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. 15ஆம் தேதி தங்கலான் உள்ளிட்ட படங்கள் வரவிருப்பதால் எதற்காக ரிஸ்க் என்று தியாகராஜனும், பிரசாந்த்தும் நினைத்திருக்கலாம்; அதனால்தான் முன்கூட்டியே ரிலீஸ் செய்கிறார்கள் என்று திரைத்துறையில் பரவலான பேச்சு எழுந்திருக்கிறது.

ட்ரெய்லர் ரிலீஸ்: படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் படத்தின் ட்ரெய்லரும் நேற்று வெளியானது. அதனைப் பார்த்த ரசிகர்கள் திருப்தியடைந்திருக்கின்றனர். மேலும் பிரசாந்த் குறித்து பேசிய தியாகராஜன், 'எனது மகனுக்கு சுக்கிர திசை ஆரம்பித்துவிட்டது. இனி தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார்’ என்று ஆரூடமும் கூறியிருக்கிறார். டாப் ஸ்டார் டாப் கியரில் செல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இரண்டாவது திருமணம்: இதற்கிடையே பிரசாந்த் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் என்று சமீபகாலமாகவே ஒரு பேச்சு ஓடியது. இந்நிலையில் அந்தகன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் திருமணம் குறித்து கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “திருமணம் என்பது நிச்சயம் ஒரு நாள் நடக்கும். நான் ஓகே சொல்லிவிட்டு ரெடியாகத்தான் இருக்கிறேன். என்னை புரிந்துகொள்ளும்படி பெண் கிடைத்தால் போதும்” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X