கெமிஸ்ட்ரியை அறிமுகப்படுத்தியதே நான் தான்.. ’அந்தகன் ஆந்தம்’ விழாவில் அதிரவிட்ட பிரசாந்த்!

சென்னை: இயக்குநர் தியாகராஜன் இயக்கத்தில் டாப் ஸ்டார் பிரசாந்த் நடித்த அந்தகன் படத்தின் அந்தகன் ஆந்தம் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசிய பிரசாந்த் தமிழ் சினிமாவில் 'கெமிஸ்ட்ரி' என்கிற வார்த்தையை அறிமுகப்படுத்தியதே அவர் தான் எனக்கூறினார்.

நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது அந்தகன் ஆந்தம் பாடலை திரையிட்டனர். அதற்கு முன்னதாக அந்த பாடலை நடிகர் விஜய் மற்றும் பிரபுதேவா முன்னிலையில், தனியாக வெளியிடப்பட்ட வீடியோவையும் திரையிட்டனர்.

Andhagan Prashanth Simran

இந்த பாடலை வெளியிட உடனடியாக சம்மதம் தெரிவித்து வெளியிட்ட தளபதி விஜய்க்கு தனது நன்றிகளை பிரசாந்த் கூறினார். அப்பா தியாகராஜன் இயக்கத்தில் நடித்தது குறித்தும் பிரசாந்த் மகிழ்ச்சியுடன் பல விஷயங்களை ஷேர் செய்துக் கொண்டார்.

அப்பா எனக்கு வில்லன் இல்லை: நடிகர் பிரசாந்தின் வாழ்க்கையை கெடுத்ததே தியாகராஜன் தான் எனக் கூறப்படுவதற்கு அவர் விளக்கம் கொடுத்து விட்டார். உங்கள் விளக்கம் என்ன என்கிற கேள்விக்கு பதில் அளித்த பிரசாந்த் அப்பா எனக்கு எப்போதுமே ஹீரோ தான். வில்லன் இல்லை என்று பளிச்சென பேசி அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

பிரியா ஆனந்த் புலம்பல்: பிரசாந்துக்கு பிடித்த நடிகை யார் என்கிற கேள்விக்கு பிரியா ஆனந்த் தான் என அந்தகன் படத்தின் ஹீரோயின் குறித்து சொன்னதுமே, பிரசாந்த் நீங்க சொன்னதை இங்க யாருமே நம்பல என மேடையிலேயே புலம்பித் தள்ளிவிட்டார் பிரியா ஆனந்த். அதன் பின்னர் பிரசாந்த் நடிகை சிம்ரன் பெயரைக் கூறினார். ஆனால், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிம்ரன் பங்கேற்கவில்லை.

Andhagan Prashanth Simran

கெமிஸ்ட்ரியை அறிமுகப்படுத்தியதே நான் தான்: சிம்ரனுக்கும் உங்களுக்கும் உள்ள கெமிஸ்ட்ரி பற்றி சொல்லுங்க பிரசாந்த் என்கிற கேள்விக்கு, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கெமிஸ்ட்ரி என்கிற வார்த்தையை அறிமுகப்படுத்தியதே நான் தான் எனக்கூறினார். விஜய் டிவியில் கடந்த 2006ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஜோடி நம்பர் ஒன் முதல் சீசனில் பிரசாந்த், ரம்யா கிருஷ்ணன் மற்றும் கலா மாஸ்டர் உள்ளிட்டோர் ஜட்ஜாக இருந்தனர். அப்போது தான் கெமிஸ்ட்ரி என்பதை தான் அறிமுகப்படுத்தியதாக பிரசாந்த் பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூறினார். மேலும், நைட்ரேட், கார்பன் டை ஆக்ஸைடு, ஆக்ஸிஜன் என ஏகப்பட்ட கெமிஸ்ட்ரி வார்த்தைகளையும் சேர்த்து அந்த கேள்விக்கு கிண்டலாக பதிலளித்திருந்தார் பிரசாந்த்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X