»   »  பிரஷாந்தின் ரகசிய நிச்சயதார்த்தம்

பிரஷாந்தின் ரகசிய நிச்சயதார்த்தம்

Subscribe to Oneindia Tamil

ஒரு வழியாக பிரஷாந்தும் விரைவில் திருமணம் செய்யப் போகிறார். சென்னையை சேர்ந்த கிரஹலட்சுமி என்ற பெண்ணுக்கும் பிரஷாந்துக்கும் சென்னையில் மிகவும்ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டது.

இதனால் கூடிய சீக்கிரம் கெட்டி மேளம் கொட்டப் போகிறது பிரஷாந்துக்கு.

கோடம்பாக்கத்தில் "மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் பட்டத்தை பல வருடம் தன் வசம் வைத்திருந்தவர் பிரஷாந்த். இவருக்குப் பின் வந்த நடிகர்களெல்லாம் குழந்தை,குட்டி என செட்டிலாகி விட, இவர் மட்டும் யார் வலையிலும் சிக்காமல் ஜாலியாக பேச்சிலர் வாழ்க்கையை அனுபவித்து வந்தார்.

இதனால் கடந்த சில வருடங்களாக பிரஷாந்தை பார்ப்பவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி, எப்ப சார் கல்யாணம்? என்று தான். பிரஷாந்தும் சளைக்காமல் அதற்குரெடிமேடாக ஒரு பதிலும் சொல்வார்.

என் அப்பாவிடம் கேளுங்களேன். அவர் யாரைப் பார்த்து தாலி கட்டச் சொல்கிறாரோ, அந்தப் பெண்ணின் கழுத்தில் நான் தாலி கட்டுவேன் என்று அப்பாவின் வாக்கைமீறாத பொறுப்பான பிள்ளையாக பதில் சொல்லி வந்தார்.

இந்த சமயத்தில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன் பிரஷாந்துக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டது என்று ஒரு தகவல் வேகமாக பரவியது. உடனே எல்லோரும்பிரஷாந்தை தொடர்பு கொண்டு அப்படியா சேதி என கேட்க, எனக்கா, நிச்சயதார்த்தமா என திருப்பிக் கேட்டார்.

இப்படி தனது மகனைப் பற்றி தாறுமாறாக பரவும் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க தியாகராஜன் நினைத்தாரோ, என்னவோ பிரஷாந்துக்கு தடாலடியாக பெண்பார்த்து நிச்சயதார்த்தத்தையும் முடித்து விட்டார்.

கடந்த ஒரு சில தினங்களுக்கு முன் தான் இந்த நிச்சயதார்த்தம் நடந்தது. மணப்பெண் சென்னையைச் சேர்ந்தவர் தான். பெயர் கிரஹலட்சுமி. சென்னையிலுள்ள ஒருநட்சத்திர ஹோட்டலில் மிகவும் ரகசியமாக, காதும் காதும் வைத்த மாதிரி நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்து விட்டார் மணமகனின் தந்தை தியாகராஜன்.

மிகவும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் தான் இந்த நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டனர்.

பிரஷாந்த் கூறியபடி மணப்பெண் அவரது அப்பாவின் செலக்ஷன் தானாம்.

சரி, "வைகாசி முடிஞ்சு ஆனி பொறந்தாச்சு, கல்யாணம் எப்போ?


Read more about: prashanths secret petrothal

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil